செய்திக்குறிப்பு
பெறுநர்
உயர்திரு. செய்தி ஆசிரியர் அவர்கள்
_______________________ நாளிதழ் / தொலைக்காட்சி
தமிழகத்தில் மழலையர்கல்வி - ஆரம்பக்கல்வி ஆகியவற்றில் கட்டாயமாக தாய்மொழித் தமிழை பயிற்று மொழி ஆக்கிட வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம்
* மழலையர்கல்வி - ஆரம்பக்கல்வி திட்டங்களில் தாய் மொழி - தமிழ் மட்டுமே கட்டாயமாக (தமிழகத்தில்) அமையும்படி இந்த கல்வியாண்டிலேயே உத்தரவிட வேண்டும்.
* தமிழ் மொழியில் பேசினால் அபராதம் விதிக்கும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
* மழலையர்கல்வி - ஆரம்பக்கல்வியில் - ஆங்கிலமொழி மற்றும் கலாச்சாரத் திணிப்பை கைவிட வேண்டும் - தாய் மொழியை காக்க நடவடிக்கை வேண்டும்.
* கர்நாடக மாநிலத்தில் அம்மாநில மக்களின் தாய் மொழியான கன்னட மொழி மழலையர் கல்வி, ஆரம்பக் கல்வியில் பயிற்று மொழியாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.
* வர்த்தக நோக்கத்தில் இயங்கும் ஆங்கில வழிப் பள்ளிகள் நீதிமன்றம் சென்று கர்நாடக மாநில அரசுக்கு எதிராக அதாவது தாய்மொழிக்கு எதிராக உத்திரவு பெற்றுள்ளன.
* தாய்மொழிக்கு எதிரான மத்திய அரசின் உத்திரவையும், நீதிமன்ற தீர்ப்பையும் மாற்றியமைக்க கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநில அரசுகளுடன் இனைத்து தமிழக அரசு சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* ஐந்தாம் வகுப்பிற்கு மேல் இந்தியா முழுவதும் உள்ளது போல தமிழகத்திலும் மும்மொழிக் கல்வித்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
* தாய்மொழி தமிழில் உயர்பட்டப் படிப்பு, மருத்துவம், பொறியியல், அறிவியல் ஆகியவற்றை படித்து முடிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வேலை வாய்புகளில் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
* தமிழகத்தில் கான்வென்ட் கல்வி எனும் போர்வையில் ஆங்கில கலாச்சார உடைகளை சீருடைகளாக சில தனியார் கல்வி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. குட்டைப் பாவாடை, கோட்டு, டை போன்றவைகள் சீருடைகளாக உள்ளன. இது இளம்பருவ மாணவ, மாணவிகளை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறது. பொதுவான சீருடை முறை அறிமுகப்படுத்த வேண்டும்.
* தமிழகம் முழுவதும் அரசுக்கு சொந்தமான ஆரம்ப நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிக் கூடங்களில் மாணவர் சேர்க்கை குறைவின் காரணமாக பள்ளிக்கூடங்களை மூடுவது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க அதிகரிக்க அதிகரிக்க இந்நிலை ஏற்படுகிறது. அரசுப் பள்ளிக்கூடங்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
* தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளை மற்றும் நன்கொடை எனும் பெயரில் கல்வியை வியாபாரம் ஆக்கி வருகின்றன. அனைவருக்கும் இலவச கட்டாய சமச்சீர் கல்வி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுதல்
வரும் திங்கட்கிழமை(26.05.2014) தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக இ.ம.க சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அணிதிரள்வீர் ஆதரவு தாரீர்.
இப்படிக்கு
தமிழ்த்திரு. அர்ஜுன்சம்பத்
நகல் : சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் செய்தி நிறுவனங்கள்