Saturday, 28 June 2014

370 - ரத்து செய்யப்பட வேண்டும்! - அர்ஜுன் சம்பத்

370 - ரத்து செய்யப்பட வேண்டும்!
By அர்ஜுன் சம்பத்
First Published : 27 June 2014 01:18 AM IST
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் என்று அழைக்கப்படும் காஷ்மீரம் மூன்று பிரிவுகளாக உள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்மு பகுதி. (இப்பகுதியில் உலகப் புகழ் பெற்ற வைஷ்ணவி கோயில் உள்ளது.) முஸ்லிம்களும் ஆட்சியாளர்களும் மட்டுமே வசிக்கும் ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதி, பெளத்தர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் லடாக் பகுதி. தற்போது அரசியல் சாஸனப் பிரிவு 370இன் படி காஷ்மீருக்காக ஒதுக்கப்படும் பெருமளவு நிதி மற்றும் திட்டங்கள் ஸ்ரீநகர் பகுதியிலேயே செலவிடப்படுகிறது. ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகள் முழுமையாக புறக்கணிக்கப்படுகின்றன.

இந்தியாவிற்கு 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு ஒரு நாள் முன்பாகவே சுதந்திரம் வழங்கப்பட்டது. பாகிஸ்தான் முழுமையாக முஸ்லிம் லீக் தலைவர் முகம்மது அலி ஜின்னாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவின் சுதந்திரமோ, இந்தியத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் சமஸ்தானங்கள் விரும்பினால் இந்தியாவுடன் இணைந்து கொள்ளலாம் என்கிற கொள்கையோடு வழங்கப்பட்டது. இதன் காரணமாக 586 சமஸ்தானங்களை சுதந்திர இந்தியாவுடன் இணைக்கும் பொறுப்பை அப்போதைய உள்துறை அமைச்சரான சர்தார் படேல் செய்தார்.

இந்தியாவுடன் இணைய மறுத்த ஹைதராபாத், ஜீனோகட் சமஸ்தானங்கள் சர்தார் படேலின் போலீஸ் நடவடிக்கை மூலம் பணிய வைக்கப்பட்டன. இதே முறையில் காஷ்மீரத்தையும் இந்தியாவுடன் படேல் இணைத்திருப்பார். ஆனால் அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு காஷ்மீர் தனது மூதாதையர்களின் மாநிலம் என்றும் எனவே தனது சொந்த மாநிலத்தின் விவகாரத்தை தான் நேரடியாக பார்த்துக்கொள்வதாகவும் கூறிவிட்டார். எனவே சர்தார் படேல் காஷ்மீர் விஷயத்தில் சற்று விலகியே இருந்தார்.

காஷ்மீரத்தை ஆட்சி செய்த மஹாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணையத்தான் விரும்பினார். ஆனால், திருவிதாங்கூர், ஹைதராபாத், ஜீனோகட் போன்ற சமஸ்தானங்கள் விரும்பியது போலக் காஷ்மீரும் தனி நாடாக இயங்கினால் என்ன என்கிற நப்பாசை அவருக்கு இருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்களுடன் இணைந்து பலூசிஸ்தான் முஸ்லிம் மலைவாழ் மக்களும் காஷ்மீரை ஆக்கிரமிக்கத் துவங்கினர். காஷ்மீரில் கொலை, கொள்ளை, கோயில் இடிப்பு, பாலியல் வன்முறை போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன.

பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீரில் நரவேட்டையாடியபோதுதான், வேறுவழியின்றி மஹாராஜா ஹரிசிங் நிபந்தனையின்றி இந்தியாவுடன் காஷ்மீர் மாநிலத்தை முழுமையாக இணைத்தார். தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனரான ஷேக் அப்துல்லா காஷ்மீர் முஸ்லீம் மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர்.

அவரது ஒப்புதல் இல்லாமல் போனால், காஷ்மீர மக்கள் இணைப்பை எதிர்க்கக்கூடும் என்று பிரதமர் நேரு கருதினார். எனவே அவரது வேண்டுகோளை ஏற்க வேண்டும் எனக்கூறி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கென அரசியல் சாஸனப்பிரிவு - 370 உருவாக்கப்பட்டது.

சட்ட மந்திரி அம்பேத்கர், உள்துறை மந்திரி படேல் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தபோதும் பிரதமர் நேரு, ஷேக் அப்துல்லாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். காஷ்மீரை காப்பாற்ற இந்தியப் படைகள் களமிறங்கியது. பாகிஸ்தான் இராணுவம் விரட்டியடிக்கப்பட்டது. காஷ்மீரில் மூன்றில் ஒரு பகுதி பாகிஸ்தான் வசமானது.

அந்த 24 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய பகுதியை நாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று சொல்கிறோம். பாகிஸ்தானியர்கள் இதனை விடுதலை செய்யப்பட்ட காஷ்மீர் பகுதி (ஆசாத் காஷ்மீர்) என்று சொல்கிறார்கள்.

இப்பகுதியில்தான், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் நடத்தும் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் செயல்படுகின்றன. போதைப் பொருள் கடத்தல், ஆயுத விற்பனை ஆகியவற்றின் மையமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் உள்ளது. முழு காஷ்மீரையும் மீட்கும் நடவடிக்கையில் இந்திய இராணுவம் வெற்றி பெற்றுக் கொண்டு இருந்த போது, நேரு இப்பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொண்டு சென்றார். யுத்த நிறுத்தம் செய்தார்.

ஐ.நா சபை இது விஷயத்தில் தலையிட்டு பாகிஸ்தான் படை காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்றும், காஷ்மீர் பகுதி மக்களிடம் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியது. மூன்றில் ஒரு பகுதியான ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் இது நாள் வரை வெளியேறாத காரணத்தால் இந்திய அரசு இந்த வாக்கெடுப்பு குறித்து கவலைப்படவில்லை.

எனவே பாகிஸ்தானும் இந்தியாவும் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டிற்கு இருபுறமும் இருக்கும் பகுதிகளை தங்கள் பகுதியாக கருதிக் கொண்டு ஆட்சி நடத்துகின்றன. ஆனால் இந்திய அரசு முழு காஷ்மீரையும் தன் வரைபடத்தில் காட்டுகிறது.

அரசியல் சாஸனப்பிரிவு - 370இன் படி ஒரு நாடு, இரண்டு கொடி, இரண்டு பிரதமர். காஷ்மீருக்குள் பிற மாநிலத்தவர் நுழைய அனுமதி அட்டை பெற வேண்டும் எனும் நிலை இருந்தது. காஷ்மீர் முதலமைச்சர் ஷேக் அப்துல்லாவும் பிரதமர் என்றுதான் அழைக்கப்பட்டார், காஷ்மீருக்கு தனிக்கொடி இருந்தது.

ஒரு நாட்டிற்குள் ஒரு நாடு எனும் நிலை மாற வேண்டும் என பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி "ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் முழக்கத்துடன் காஷ்மீருக்குள் தடையை மீறி நுழைந்தார். ஷேக் அப்துல்லா அரசாங்கத்தால் அவர் கைது செய்யப்பட்டார். சிறைச்சாலையில் மர்மமான முறையில் அவரது மரணம் நிகழ்ந்தது. அதன் பின்னர் தனிக்கொடி, தனி பிரதமர், அடையாள அட்டை போன்ற விஷயங்கள் மாறின.

ஆனாலும் அரசியல் சாஸனப் பிரிவு 370இன் படி காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் பொருந்தாது. அதாவது இந்திய நாடாளுமன்ற அதிகார வரம்பிற்குள் காஷ்மீரம் இல்லை. காஷ்மீர் சட்டசபை அங்கீகரித்தால் மட்டுமே நமது நாடாளுமன்றத்தின் அதிகாரம் செல்லுபடியாகும். காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையா சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம்.

காஷ்மீர் மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் காஷ்மீரில் சொத்து வாங்கும் உரிமையை இழக்கிறார்கள். ஆனால் காஷ்மீர் மாநில ஆண்கள் வெளி மாநிலப் பெண்களை திருமணம் செய்து கொண்டாலும் காஷ்மீரில் சொத்து வாங்கலாம்.

மாநில எல்லைகளை நிர்ணயிக்கும் அரசியல் சாஸனப்பிரிவு 238 இம்மாநிலத்திற்கு பொருந்தாது. இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் அனைத்துமே ஜம்மு காஷ்மீர் நீங்கலாக என்று தான் இயற்றப்படுகிறது.

அமர்நாத் யாத்திரை மேற்கொள்வோருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. உண்மை காஷ்மீரிகளான பண்டிட்டுகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். ஜம்முவிலும், டெல்லியிலும் லட்சக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, "அரசியல் சாஸனப்பிரிவு 370ஐ ரத்து செய்வேன்' என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த பாரதிய ஜனதா கட்சி, காஷ்மீர் மாநிலத்தின் ஆறு தொகுதிகளில் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றுள்ளது.

எனவே அரசியல் சாஸனப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்குண்டான தனது கருத்தை ப.ஜ.க தலைவர்கள் வெளிப்படுத்த துவங்கியுள்ளனர். ஆனால் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா 370ஐ ரத்து செய்தால் காஷ்மீரம் இந்தியாவுடன் இருக்காது என மிரட்டி வருகிறார்.

நேரு காலத்தில் இதேபோல ஷேக் அப்துல்லா நடந்து கொண்டபோது ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு தமிழகத்தில் கொடைக்கானல் விருந்தினர் மாளிகையில் காவல் வைக்கப்பட்டார். தாத்தாவுக்கு ஒரு நீதி, பேரனுக்கு ஒரு நீதியா? இந்தியாவை மிரட்டும் அளவுக்கு முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு துணிவு ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம்?

தற்பொழுது இடது சாரி இயக்கங்களும் சிறுபான்மை ஆதரவு இயங்கங்கள் என்று சொல்லிக்கொள்வோரும், மதச்சார்பற்ற தன்மை பற்றிப் பேசுவோரும் 370ஐ ரத்து செய்யக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்வதால் இவர்களுக்கு என்ன பாதிப்பு என்று தெரியவில்லை. இதனால் எல்லாம் இந்தியாவில் வாழும் முஸ்லிம் சகோதரர்கள் இவர்களுக்கு ஆதரவாகி விடுவார்கள் என்று கருதினால் அதைவிட அறிவீனம் எதுவும் இருக்க முடியாது.

பாரதிய ஜனதா கட்சி 370ஐ துணிந்து ரத்து செய்ய வேண்டும். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரின் பகுதிகளை நாம் திரும்பப் பெற்றாக வேண்டும். இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு ஒரே சட்டம் என்கிற நிலை வரவேண்டும். ஜம்மு லடாக் ஆகிய பகுதிகள் காஷ்மீரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித் தனி மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும். தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி புதிய பிரதமர் நரேந்திர மோடி இதை செய்து முடிப்பார் என்று எதிர்பார்ப்போம்.



கட்டுரையாளர்: தலைவர், இந்து மக்கள் கட்சி.

ALL INDIA 3rd HINDHU ADHIVATION IN GOA 20.06.2014 to 27.06.2014

ALL INDIA 3rd HINDHU ADHIVATION IN GOA 20.06.2014 to 27.06.2014
Tamil Thiru Arjun Sampath, Jagatheesanar, Ponnusamy, Babu (a) Mayandi, Om Kar Balaji

ALL INDIA 3rd HINDHU ADHIVATION IN GOA 20.06.2014 to 27.06.2014

ALL INDIA 3rd HINDHU ADHIVATION IN GOA 20.06.2014 to 27.06.2014
Tamil Thiru Arjun Sampath, Jagatheesanar, Ponnusamy, Babu (a) Mayandi, Om Kar Balaji (5 photos)
L

ALL INDIA 3rd HINDHU ADHIVATION IN GOA

ALL INDIA 3rd HINDHU ADHIVATION IN GOA 

ARJUN SAMPATH JI AT ALL INDIA HINDU ADHIVESHAN WITH PRAMOD MUTHALIK , SHINDE ADHIVESHAN IN A PRESS MEE

ARJUN SAMPATH JI AT ALL INDIA HINDU ADHIVESHAN WITH PRAMOD MUTHALIK , SHINDE ADHIVESHAN IN A PRESS MEET...............

ELAGIRI PUBLIC MEETING

ELAGIRI PUBLIC MEETING..............

கோவையில் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ள வங்காள தேச ஊடுருவல்காரர்களை வெளியேற்றிட கோரிக்கை

பொறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்
முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை.

வழி : உயர்திரு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் : 30.06.2014, கோவை

மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவை மாநகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வங்க தேசத்தைச் சார்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியேறி உள்ளனர். நகைத் தொழிலாளர்கள் கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் கூலி ஆட்களாகவும், குடியேறி உள்ளனர்.
இடையர் வீதி, மா.ந.க வீதி, கருப்பகவுண்டர் வீதி, சுப்பையா வீதி, சலீவன் வீதி, தெலுங்கு பிராமணாள் வீதி, காந்தி பார்க், கடை வீதி, கெம்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது இவர்கள் பெரும்பான்மை மக்களாக மாறியுள்ளனர். இவர்களுக்கென தனி மசூதிகள், இந்து வழிபாட்டுத் தலங்கள், சலூன்கள், ஹோட்டல்கள், கூரியர் சர்வீஸ்கள் உள்ளிட்டவைகள் ப்ரத்யேகமாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
பெரும்பாலும் இவர்கள் நமது நாட்டிற்கு வெளியே உள்ள வங்காள தேசத்திலிருந்து சட்ட விரோதமாக மேற்கு வங்க மாநிலத்திற்குள் ஊடுருவி அங்குள்ள ஏஜெண்ட்டுகள் மூலம் மேற்கு வங்க மாநிலத்தின் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பெற்று அங்கிருந்து கோவையில் குடியமர்த்தப்படுகின்றனர்.
மாணவர்கள் என்கிற போர்வையிலும் இத்தகைய சட்ட விரோத குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக மைடா, சுந்தர் கஞ்ச், 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான பேர் வருகை தந்துள்ளனர். இவர்கள் இந்து பெயர்களிலும் மறைந்து கொண்டுள்ளனர்.
இப்படி இந்தியா முழுக்க சுமார் 2 1/2 கோடி பேர் ஊடிருவியுள்ளதாக கடந்த கால காங்கிரஸ் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இப்படி ஊடுருவியுள்ளவர்களால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு போன்ற வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு தங்கள் சொந்த மண்ணில் வாழ இயலாத சூழல் ஏற்படுகிறது.
குறிப்பாக கோவையில் உள்ளூர் மக்களின் தொழில் மற்றும் வேலைவாய்புக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க நடைபெற்ற பயங்கரவாதச் செயல்களில் இத்தகைய ஊடுருவல்காரர்களின் பங்களிப்பும் உள்ளது.
ஏற்கனவே வேலூர் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வங்க தேச தீவிரவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்க தேச முஸ்லீம் ஊடுருவல்காரர்களை கண்டறிந்து அவர்களை வெளியேற்றிட உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் படி பணிந்து வேண்டுகிறோம்.
இப்படிக்கு
என்றும் தேசப்பணியில்

Kanthalogam sivasubramaniyar trust


Photo
PROTEST AGAINST U.R.ANANTHAMOORTHY IN BANGLORE AT MACKEREY CIRCLE.......

கனவில் கூட நினைக்க முடியாத வகையில் பசுக்கள் கொடூரக் கொலை - இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை தடை செய்ய வேண்டும் - அர்ஜூன் சம்பத்
பெண்ணின் கழுத்தை அறுத்து தங்க நகைகள் கொள்ளை
தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் - மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
இந்திக்கு சமூக வலைத்தளங்களில் முன்னுரிமை என்பது மாபெரும் தவறு - சரத்குமார்
இந்து முன்னணி பிரமுகர் கொலை, ஊர்வலம், வன்முறை! - எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், பசுவதை தடைச் சட்டத்தைத் தேசிய அளவில் அமல்படுத்தல், மதமாற்றத் தடைச் சட்டத்தைத் தேசிய அளவில் அமல்படுத்தல், முல்லை பெரியாறு - சிறுவாணி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்துடன் மோதல் போக்கைக் கொண்டுள்ள கேரளத்தைக் கண்டித்தல், கோவை வழியாகச் செல்லும் அனைத்து இரயில்களும் கோவை போத்தனூர் சந்திப்புகளில் நின்று செல்வது, கச்சத்தீவை மீட்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை மத்திய நரேந்திர மோடி அரசு நிறைவேற்றக் கோரி, இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பாகக் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
19.06.2014 அன்று காலை 11 மணி அளவில் கோவை தமிழ்நாடு ஹோட்டல் முன்பாக, இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் வாழ்த்துரை வழங்க, மாநிலச் செயலாளர் டி.சி.செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் கீழ்கண்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
1. தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மக்கள் குடிநீருக்கே திண்டாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் காவிரி நதி நீர் தொடர்பான சிக்கலுக்குத் தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் பங்கீடு ஆணையத்தையும் உடனடியாக அமைக்க உத்தரவிட்டும் மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்பது வேதனைக்குரியது. கர்நாடக முதல்வர் தலைமையில் மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பிரதமரைச் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கூறிய கருத்துகளுக்குத் தமிழக முதலமைச்சர் 30 பக்கங்களுக்கு மேல் விளக்கக் கடிதம் அளித்தும் இது வரை மத்திய அரசு தமிழக மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யக்கூடிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது. உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டுக் குழுவையும் அமைத்து தமிழக விவசாயிகளைக் காக்க வேண்டும்.

Thursday, 19 June 2014

Protest against cow slaughter


Hindu makkal katchi recent activities













இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பாக 6 அம்ச கோரிக்கையை மத்திய நரேந்திர மோடி அரசு நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்




பத்திரிக்கைச் செய்திக்குறிப்பு


பெறுநர்
உயர்திரு.செய்தி ஆசிரியர் அவர்கள்
கோவை.

ஐயா வணக்கம்.
இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பாக 6 அம்ச கோரிக்கையை மத்திய நரேந்திர மோடி அரசு நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் 19.06.2014 அன்று காலை 11.00 மணி அளவில் கோவை தமிழ்நாடு ஹோட்டல் முன்பாக மாநில தலைவர் தமிழ்திரு.அர்ஜுன் சம்பத் வாழ்த்துரை வழங்க மாநில செயலாளர் T.C.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் கீழ்கண்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

1. தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மக்கள் குடிநீருக்கே தீண்டாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் காவிரி நதி நீர் தொடர்பான சிக்கலுக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரிநீர் பங்கீடு ஆணையத்தையும் உடனடியாக அமைக்க உத்தரவிட்டும் மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்பது வேதனைக்குரியது. கர்நாடக முதல்வர் தலைமையில் மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று கூறிய கருத்துக்களுக்கு தமிழக முதலமைச்சர் 30 பக்கங்களுக்கு மேல் விளக்க கடிதம் அளித்தும் இது வரை மத்திய அரசு தமிழக மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யக்கூடிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது. உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு குழுவையும் அமைத்து தமிழக விவசாயிகளை காக்க வேண்டும்.

உச்ச நீதி மன்றம் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு பலவித கட்டுப்பாடுகளை விதித்து அதை தமிழக அரசும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் கண்காணித்து ஜல்லிக்கட்டை நடத்தி வந்த போதும், தற்போது ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கே மிருகவதை சட்டத்தின் கீழ் தடை விதித்துள்ளது. ஆனால் உழவுக்கும், பாலுக்கும் என்று தங்களது குடும்பங்களை காக்கும் குல தெய்வம் போல் காத்து வந்த பசுக்களை ஒரு சில இடைத்தரகர்கள் அப்பாவிக் மக்களிடம் தவறான தகவல்களை கூறி அவர்களிடம் உள்ள பசு இனங்களை வாங்கி கேரள வியாபாரிகளிடம் விற்று ஒரே லாரியில் 30-க்கும் மேற்பட்டவற்றை அடைத்துச் சென்று கனவில் கூட நினைக்க முடியாத வகையில் கொடூர கொலை செய்து மாமிசமாக விற்று வருகின்றனர். அதனால் தமிழகத்தில் உழவுக்கு மாடுகள் இல்லாமலும், செயற்கை பால் உற்பத்தி செய்யக்கூடிய சூழ்நிலை உள்ளது. இது ஜல்லிக்கட்டில் ஒரு வீரனிடம் பிடிபடும் மாட்டை விட மாமிசத்திற்காக தலையில் சம்மட்டி போன்றவற்றால் பசுவின் தலையில் அடித்து கொல்லுவது எந்த விதத்தில் நியாயமானது. எனவே பசுவினத்தை காப்பாற்ற பசுவதை தடைச் சட்டத்தை தேசிய அளவில் அமுல்படுத்த வேண்டும்.

3. இந்தியா முழுவதும் கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் தங்களது அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணம் பெறுவதற்காக, இங்குள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மலை வாழ் மக்களையும், இப்போது பெரு நகரங்களில் கூட ஜெபக் கூடங்களை ஒவ்வொரு தெருவிலும் துவக்கியும், இஸ்லாமியர்கள் பல்வேறு வகைகளிலும் சாதாரண மக்களில் இருந்து பிரபலமானவர்கள் வரை தங்களது ஆசை வார்த்தைகள் மூலம் மதம் மாற்றிவருகின்றனர். இது இந்திய இறையான்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே மதமாற்ற செயல்களை தடுத்து நிறுத்திட மதமாற்ற தடைச் சட்டத்தை தேசிய அளவில் அமுல்படுத்திட வேண்டும்.

4. இந்திய உச்ச நீதிமன்றம் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை தமிழக அரசு 142 அடியாக உயர்த்திக் கொள்ள உத்தரவு அளித்தபிறகு கேரள அரசு தமிழகத்திற்கெதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது முல்லை பெரியாறு அணைப்பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது, கோவையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணைப்பகுதியில் உள்ள நீர்வரத்து குழாய்களை அடைப்பது போன்ற அடாவடி செயல்களை மேற்கொண்டுள்ளது கோவையில் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்கள் சிறுவாணி தொடர்பாக கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தும் கூட தனது அடாவடித்தனத்தை தொடர்வதுடன். பல்வேறு இடையூறுகள் மூலம் தமிழகத்துடன் மோதல் போக்கை கேரளா மேற்கொண்டு வருகின்றது இதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.

5. தென்னிந்தியாவின் மான்செஷ்டர் என்றழைக்கப்படும் கோவை இன்று இந்திய இரயிலே துறையால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றது. பருத்தி, மோட்டார், ஜவுளி என்று பல்வேறு துறைகளில் கோடிக்கனக்கான ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் கோவைக்கு இரயில்வே துறை எந்த கட்டமைப்பு வசதியும் பெரிய அளவில் செய்து கொடுக்கப்படவில்லை. கேரள மாநிலம் பாலக்காடு இரயில் நிலையத்தில் நின்று செல்லும் இரயில்கள் கூட கோவை, போத்தனூர் சந்திப்புகளில் நிறுத்தப்படுவதில்லை. இதற்கு கேரளத்தை சார்ந்த இரயில்வே அதிகாரிகள் தான் காரணம். மற்றும் சென்ற மத்திய அரசால் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட இரயிவே திட்டங்கள் பல கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல ஆமை வேகத்தில் நடைபெறுகின்றது. எனவே கோவை வழியாக செல்லும் அனைத்து இரயில்களும் கோவை போத்தனூர் சந்திப்புகளில் நின்று செல்வதுடன். தமிழகத்திற்கான இரயில்வே திட்டங்களை வேகமாக செயல் படுத்த வேண்டும்.

6. தமிழக மீனவர்கள் அன்றாடம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது. கொல்லப்படுவது. படகுகள் மின்பிடி சாதனங்கள் சேதப்படுத்தப்படுவது ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத சூழ்நிலையே உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து நம் நாட்டு மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடித்திடவும் நமது உரிமையை நிலைநாட்டிடவும், தமிழக முதல்வர் எடுத்துள்ள கச்சத்தீவை மீட்பது தொடர்பான சட்டமன்ற மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து கட்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

இந்த 6 அம்ச கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்படிக்கு


 
அன்புடன் ,
அர்ஜுன் சம்பத்