Sunday, 15 June 2014

பொள்ளாச்சி - பாலியல் பலாத்தகார சம்பவத்தை கண்டித்து - இ.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

நாள் : 14.06.2014 சனிக்கிழமை மாலை 4 மணி
இடம் : செஞ்சிலுவை சங்கம் முன்பு

பொள்ளாச்சி - பேருந்து நிலையம் அருகில் உள்ள கிறிஸ்துவ தேவாலய விடுதியில் தங்கியிருந்த இரண்டு அப்பாவி சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குற்றவாளிகளை பிடித்து தண்டிக்கும் முயற்சியில் காவல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்திரவிட்டு உள்ளார்.

மேற்படி கிறிஸ்துவ தேவாலய விடுதி உரிய வசதிகள் இன்றியும், விதிமுறைகளுக்கு மாறானதாகவும், சட்ட விரோதமாகவும் நடத்தப்பட்டு வந்த விபரம் இப்போது வெளிப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட பாதிரியார் மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் உள்ளதாகவும், தேவாலய நிர்வாகத்தின் சொத்து நிதிகளில் பல மோசடி புரிந்துள்ளதாகவும் இதன் காரணமாக பாதிரியார் தலைமறைவாக உள்ளார். இந்த சர்ச் நிறுவனம் T.E.L.C. பிரிவுக்கு சொந்தமானது ஆகும். இது போல கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு கிறிஸ்துவ சர்ச்சுக்கள் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மோசடி மதமாற்ற உள்நோக்கத்துடன் ஏழை எளிய அப்பாவி மக்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி கொடுப்பதாக கூறியும், அநாதை மற்றும் ஆதரவற்ற மாணவ மாணவிகளை தத்தெடுத்து இல்லங்களில் பராமரித்து வருவதாக கூறி உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் நன்கொடைகள் பெற்று பெரும் ஊழல் புரிந்து வருகின்றனர்.

எனவே மேற்கண்ட பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், கோவை மாவட்டம் முழுவதும் கிறிஸ்துவ தேவாலய தொண்டு நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் உரிய சோதனைகள் மேற்கொண்டு சட்ட விரோதமாக செயல்படும் கிறிஸ்துவ பாதிரிகள் மற்றும் கிறித்துவ சர்ச்சுகள் மீது கடும் நடவடிக்கை வேண்டியும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டியும், மேற்படி இல்லத்தில் உள்ள அநாதை சிறுவர் சிறுமிகளின் கல்வி தொடர உரிய மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டியும் 14.06.2014 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கோவை செஞ்சிலுவை முன்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில அமைப்பு செயலாளர் திரு."கணபதி"ரவி தலைமையில் நடைபெறுகின்றது அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment