Sunday, 15 June 2014

தமிழகத்திலிருந்து கேரளத்தில் குடியேறி சிறுகடன் கொடுத்து வாங்கி பிழைத்து வரும் அப்பாவி தமிழர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களை காப்பாற்றிட வேண்டுதல் மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.

மனுதாரர்
திரு.சடையப்பன் பொன்னுசாமி
மாநில அமைப்புக்குழு தலைவர்
94421 82820

பெறுநர்
மாண்புமிகுதமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,
மக்கள் குறைதீர்க்கும் பிரிவு, தமிழக அரசு தலைமைச் செயலகம், 
புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை.

வழி : உயர்திரு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் : 16.06.2014, கோவை

மாண்புமிகுதமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்.

பொருள் : தமிழகத்திலிருந்து கேரளத்தில் குடியேறி சிறுகடன் கொடுத்து வாங்கி பிழைத்து வரும் அப்பாவி தமிழர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களை காப்பாற்றிட வேண்டுதல் மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.

தமிழகத்திலிருந்து குறிப்பாக கொங்கு மண்டலத்திலிருந்து பல வருடங்களுக்கு முன்பாக கேரளத்தில் குடியேறி திருவனந்தபுரம், ஆலப்புழா, பாலக்காடு, கோட்டயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பாதியிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ்மக்கள் வசித்து வருகின்றனர்.

கேரள மாநில மக்களுக்கு எந்த வித இடையூறுமின்றி யாருக்கும் தீங்கிழைக்காமல் அமைதியான முறையில் அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு எவ்வித ஆவணங்களுமின்றி நம்பிக்கையின் அடிப்படையில் சிறு கடன் கொடுத்து-வாங்கி தொழில் செய்து பிழைத்து வருகின்றனர்.

சமீபகாலமாக தமிழர் விரோத எண்ணத்துடனும் பொறாமை உணர்வுகளுடனும் - மனப்புறம், முத்தூட், கொசமட்டம் உள்ளிட்ட கேரள நிதி நிறுவனங்களின் தூண்டுதலின் பேரிலும் அப்பாவி தமிழர்கள் மீது எவ்வித ஆதாரமும் இன்றி பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். 


இதன் காரணமாக நாளது வரை சுமார் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கேரளமாநில காவல்துறையின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக அங்கு வசிக்கும் அனைத்து தமிழர்களும் குறிப்பாக சிறு கடன் கொடுத்து வியாபாரம் செய்து வரும் தமிழர்கள் அனைவரும் மிகுந்த அச்ச உணர்வுடன் உள்ளனர். 

இது குறித்து கேரள மாநில முதலமைச்சர் மற்றும் காவல் துறை தலைவரின் கவனத்திற்கு பலமுறை எடுத்துச் செல்லப்பட்ட பிறகும் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்கின்றன. கேரள மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் தொழிலையும் உடைமைகளையும் பாதுகாத்திட உரிய சட்ட நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் இது விஷயத்தில் நேரடியாக தலையிட்டு கேரள மாநில முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்தி கேரள மாநிலத்தில் பிழைத்து வரும் அப்பாவி தமிழர்களை காப்பாற்றிட வேண்டுகிறோம். 
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள


நகல்கள் : 
சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் செய்தி நிறுவனங்கள்
அன்புடன் ,
அர்ஜுன் சம்பத்
(இந்து மக்கள் கட்சி).h

No comments:

Post a Comment