நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூரைச் சேர்ந்தவர் விஜயேந்திரன். இவர் நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்து மக்கள் கட்சி தேவூர் கிளை தலைவர் வாசுதேவன் கார் மோதி பலியானார். அவரை கார் ஏற்றி கொலை செய்ததாக இந்து மக்கள் கட்சியினர் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்தனர்.
இதனை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்தனர். இதுதொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர், தாசில்தார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டுனர். அப்போது விபத்து வழக்கை வேறு அதிகாரிகள் கொண்டு விசாரணை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று காலை 5.30 மணிக்கு தேவூரில் உள்ள தனது வீட்டில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் விஜயேந்திரன் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் 2 பேர் வந்தனர். அவர்கள் கதவை தள்ளி உள்ளே செல்ல முயன்றனர். சத்தம் கேட்டதும் விஜயேந்திரன் வெளியே வந்தார். அவரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவரை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஜயேந்திரன் தேவதுர்க்கை சக்தி பீடம் அமைப்பு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தேவூர், மலேசியா போன்ற இடங்களில் அவர் சொற்பொழிவு நடத்தி உள்ளார்.
No comments:
Post a Comment