Friday, 7 November 2014

இரயில் தண்டவாள உடைப்பு, பேருந்து தீ வைப்பு சம்பவங்களால் இராமேசுவரத்தில் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் அவதி உடனடி தீர்வு காண இ.ம.க. வேண்டுகோள்

இரயில் தண்டவாள உடைப்பு, பேருந்து தீ வைப்பு சம்பவங்களால் இராமேசுவரத்தில் பக்தர்கள் - சுற்றுலா பயணிகள் அவதி உடனடி
தீர்வு காண இ.ம.க. வேண்டுகோள்
தேதி : 31.10.2014
செய்திக்குறிப்பு
பெறுநர்
உயர்திரு. செய்தி ஆசிரியர் அவர்கள்
________________________ நாளிதழ் / தொலைக்காட்சி
இரயில் தண்டவாள உடைப்பு, பேருந்து தீ வைப்பு சம்பவங்களால் இராமேசுவரத்தில் பக்தர்கள் - சுற்றுலா பயணிகள் அவதி உடனடி
தீர்வு காண வேண்டுகோள்
இலங்கை கொழும்பு உயர்நீதி மன்றத்தில் தமிழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கை மீனவர்கள் 3 பேர் ஆகியோருக்கு நேற்று (30.10.2014) மாலை 4 மணிக்கு போதை பொருள் கடத்தல் தண்டனை சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இராமநாதபுரம் இராமேசுவரம் நெடுஞ்சாலையில் தங்கச்சி மடத்தை சார்ந்த கிறிஸ்துவ மீனவர்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்திய இறையான்மைக்கு எதிராக எப்போதும் செயல்பட்டு வரும் சில கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களின் தூண்டுதலின் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் திட்டமிட்டு வன்முறையை உருவாக்கி டிரான்ஸ்பார்மர்கள் மீது தீவைக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரயில்வே தண்டவாளம் உடைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் தீவைக்கப்பட்டுள்ளன.
இராமேசுவரம் - மதுரை நெடுஞ்சாலையில் முழுமையாக போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. 8 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடை நீடிக்கின்றது. போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனை சுமுகமாக தீர்க்க அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துரையினர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதன் காரணமாக இராமேசுவரத்தில் உள்ள பொது மக்களும், பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஊர்திரும்ப முடியாமல் வயதானோர், குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், இராமேசுவரம் இரயில் நிலையத்தில் காத்து கிடக்கின்றனர். இராமேசுவரத்தில் உள்ள பக்தர்களும் ஊர்திரும்பிட உரிய உதவிகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை அநீதியானது நாம் அனைவரும் கண்டிக்கின்றோம். இலங்கை நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை மீட்க மாண்புமிகு தமிழக முதல்வர் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். மத்திய அரசும் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை காப்பாற்றும் அறப்போராட்ட நடவடிக்கைகள் அனைத்திலும் இ.ம.க முழுமையாக ஈடுபடும். அதே நேரத்தில் கிறிஸ்த்துவ மீனவர்கள் இராமேசுவரம் நெடுஞ்சாலையில் தொடர்ந்து சாலை மறியல் மற்றும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இந்திய இறையான்மைக்கு எதிராகவும் இராமேசுவரம் புனித தீவை துன்புறுத்தி நடத்தும் போராட்டங்களை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கின்றோம். இராமேசுவரம் புனித தீவையும், தீவில் உள்ள இந்து தமிழர்களை காப்பாற்றிட இ.ம.க அனைத்து முயர்சிகளையும் மேற்கொள்ளும்
என்றும் தேசப்பணியில்
அன்புடன் ,
அர்ஜுன் சம்பத்
(இந்து மக்கள் கட்சி).

No comments:

Post a Comment