
சென்னை-தாம்பரத்தில் தேவர் குருபூஜை விழா குழுவின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இசுலாமிய மதவெறி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை வேண்டுதல்.
31.10.2014
செய்திக்குறிப்பு
பெறுநர்
உயர்திரு. செய்தி ஆசிரியர் அவர்கள்
________________________ நாளிதழ் / தொலைக்காட்சி
உயர்திரு. செய்தி ஆசிரியர் அவர்கள்
________________________ நாளிதழ் / தொலைக்காட்சி
சென்னை-தாம்பரத்தில் தேவர் குருபூஜை விழா குழுவினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இசுலாமிய மதவெறி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை வேண்டுதல்.
சென்னை - தாம்பரம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தேவர் பேரவை உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து அமைதியான முறையில் அக்டோபர் 30-ம் தேதி தேவர் குருபூஜை விழாவை வியாபாரிகள் சங்க தலைவர் திரு.E.S.பாண்டியன் தலைமையில் சிறப்பாகவும் அமைதியான முறையிலும் கொண்டாடி வருகின்றனர்.
வழக்கம் போல இந்த ஆண்டும் தாம்பரம் பகுதியில் குருபூஜை விழாவிற்கான கொடி தோரண ஏற்பாடுகளை செய்து வந்த முத்துப்பாண்டியன் செல்லப்பாண்டியன், மணிகண்டன், சதீஷ் ஆகியோர் தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையிலேயே இசுலாமிய மதவெறி அமைப்பு வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையத்திற்கு கூட்டமாக வந்து முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்ஸ்பெக்டர் செல்லப்பாவும் தாக்கப்பட்டு உள்ளார். காவல் நிலையத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த வரும் போதே ஆயுதங்களுடன் வந்துள்ளனர். ஏற்கனவே தாம்பரம் கடைவீதி பிற மாவட்டங்களில் குண்டு வெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் நடைபாதை கடைகளை அமைத்துக் கொடுத்துள்ளனர்.
தாம்பரம் பகுதியில் மதவெறி இசுலாமிய அமைப்புக்கள் பலவற்றை துவக்கி வெளி மாவட்டங்களில் இருந்து இசுலாமிய மதவெறியர்களை அழைத்து வந்து கூட்டங்களை நடத்தி தொடர்ந்து ஆக்ரமிப்பு நடவடிக்கைகளிலும் வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சில இசுலாமிய மதவெறி நிறுவனங்களை நடத்துபவர்கள் திடீர் பணக்காரர்கள் ஆகிறார்கள். மத ரீதியான பதட்டத்தை தாம்பரம் பகுதியில் தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர்.
தாம்பரம் பகுதியில் இந்து வியாபாரிகளும் பொது மக்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். காவல் துறையினர் மற்றும் அரசியல் கட்சிகளில் மேல்மட்ட தலைவர்கள் சிறுபான்மையினர் நலன் என்கிற ஒரே கண்ணோட்டத்தில் செயல்படுகின்ற காரணத்தினால் பல விஷயங்கள் வெளியே வருவது இல்லை.
29ம் தேதி இரவு நடைபெற்ற சம்பவங்களில் காவல் துறை முன்னிலையிலேயே தேவர் பேரவையினர் தாக்கப்பட்டு உள்ளனர். ஆனால் காவல்துறை இசுலாமிய மதவெறி இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் - படுகாய மடைந்து மருத்துவமனையில் உள்ள முத்துப்பாண்டியன், செல்லப்பாண்டியன், மணிகண்டன், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாம்பரத்தில் பதட்ட சூழலை உருவாக்கி வரும் இசுலாமிய மதெவெறி அமைப்புக்களை தடை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள தேவர் பேரவை நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும். தாம்பரம் பகுதியில் நடைபாதை வியாபாரிகள் எனும் போர்வையில் ஊடுறுவியுள்ள பழைய குற்றவாளிகளை அப்புரப்படுத்த வேண்டும். தாம்பரம் பகுதி இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
இப்படிக்கு
என்றும் தேசப்பணியில்
என்றும் தேசப்பணியில்
தமிழ்திரு.அர்ஜுன்சம்பத்
No comments:
Post a Comment