Tuesday, 1 July 2014

தங்களது இரயில்வே பட்ஜெட்டில் - தமிழகத்தில் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள கீழ்காணும் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகின்றது.

கோரிக்கை மனு

மனுதாரர்,
உயர்திரு.அர்ஜுன் சம்பத்
தலைவர் - இந்து மக்கள் கட்சி

பெறுநர்
மாண்புமிகு. இந்திய இரயில்வே துறை மத்திய அமைச்சர் அவர்கள்
இரயில்வே துறை அமைச்சகம், புது தில்லி.

மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.சதானந்த கௌடா அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும், வணக்கங்களும் சமர்ப்பிக்கப்படுகிறது.

பொருள் : தங்களது இரயில்வே பட்ஜெட்டில் - தமிழகத்தில் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள கீழ்காணும் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகின்றது.

1. கோவை - பொள்ளாச்சி - பழனி - 147 கி.மீ
2. ஈரோடு - தாராபுரம் - பழனி - 90 கி.மீ
3. பொள்ளாச்சி - பாலக்காடு - 50 கி.மீ
4. மதுரை - தேனி - போடி - 95 கி.மீ
5. மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி - 145 கி.மீ
6. விழுப்புரம் - திருச்சி - திண்டுக்கல் - 273 கி.மீ
7. திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி - 148 கி.மீ
8. திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் - அகஸ்தியம்பள்ளி - 37 கி.மீ
9. மகாபலிபுரம் - கடலூர் - புதுச்சேரி - 140 கி.மீ

* தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் இரண்டாவது பெரிய இரயில்வே நிலையமான கோவை சென்ட்ரல் நிலையத்திற்கு முன்புறமுள்ள இஸ்லாமியர்களின் கபரஸ்தானை (சுடுகாட்டை) உடனடியாக மாற்றி இரயில்வே விரிவாக்கப் பணிக¨ளை மேற்கொள்ளவேண்டும். மேலும் இந்த நிலத்தின் பயன்பாட்டினை மாற்றி சட்டவிரோதமாக அனுமதியின்றி இரயில் நிலையத்திற்கு இடயூராக கட்டியிருக்கும் வியாபாரக் கடைகளையும், ஆக்கிரமிப்பையும் அகற்றிட வேண்டுகிறோம்.

* புதிதாக அமைக்கப்பட்டுள்ல சேலம் இரயில்வே கோட்டத்தை புறக்கணிக்க வேண்டாம். சேலம் இரயில்வே கோட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

* கோவை மாநகரம் மற்றும் தமிழகத்தில் தேவையான பகுதிகளில் புறநகர் மின்சார இரயில்வே திட்டங்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுகிறோம்.

* தமிழகத்திலிருந்து கோவை வழியாக வடமாநிலங்களுக்கு தேவையான இரயில்களுக்கு அனுமதி தர வேண்டுகிறோம். குறிப்பாக பெங்களூர் - கோவை இரவு நேர இரயில் மற்றும் இராமேஸ்வரம் - கோவை இரவு நேர இரயில் திட்டங்களை செயல் படுத்தும்படி வேண்டுகிறோம்.
நன்றி
இப்படிக்கு
என்றும் தேசப்பணியில்


அன்புடன் ,
அர்ஜுன் சம்பத்
(இந்து மக்கள் கட்சி).

No comments:

Post a Comment