Sunday, 20 July 2014

முஸ்லீம் மசூதிகள் மற்றும் வக்பு வாரியம், கிறிஸ்துவ சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்துவ சபைகளையும் தமிழக அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் கையகப்படுத்தி நிர்வாகம் செய்ய வேண்டும்

முஸ்லீம் மசூதிகள் மற்றும் வக்பு வாரியம், கிறிஸ்துவ சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்துவ சபைகளையும் தமிழக அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் கையகப்படுத்தி நிர்வாகம் செய்ய வேண்டும் - கோரிக்கை மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.

கோரிக்கை மனு
18.07.2014
மனுதாரர்கள்:
திரு. "ஜெயம்" பாண்டியன் 98946 86544 
மாநில அமைப்பாளர் - இளைஞரணி
திரு."கணபதி" ரவி 99440 22894
மாநில செயலாளர் - அமைப்புக்குழு

பொறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்
முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை.

பொருள் : இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இந்து சமய திருக்கோயில்கள் தமிழக அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுவது போல, முஸ்லீம் மசூதிகள் மற்றும் வக்பு வாரியம், கிறிஸ்துவ சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்துவ சபைகளையும் தமிழக அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் கையகப்படுத்தி நிர்வாகம் செய்ய வேண்டும் - கோரிக்கை மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.

மதச்சார்பற்ற அரசு என்று சொல்கின்றதமிழக அரசு இந்து மத கோயில்களை மட்டும் தன் நிர்வாகத்தில் வைத்திருப்பது தமிழக இந்துக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும்.

இந்துக் கோயில்களின் வருமானம் மற்றும் சொத்துக்களின் நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் மேற்கொள்வதால் கோயில் வருமானம் முழுக்க தமிழக அரசு கையகப்படுத்தி கஜானாவில் வைத்து அரசின் பிற திட்டங்களுக்கும் செலவு செய்யப்படுகிறது.

இதன் காரணமாக இந்து கோயில்கள் வருமானத்தைக் கொண்டு இந்து சமயம் பரப்புதல், கல்விச் சேவை அநாதை இல்லம், மருத்துவ சேவை போன்ற காரியங்களை செய்ய முடிவதில்லை. அரசும் இந்து சமய வளர்ச்சிக்கும் பிரச்சாரத்திற்கும் செலவிடுவது இல்லை. இதனால் இந்து சமய வளர்ச்சி தமிழகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

கிறிஸ்துவ, இஸ்லாமிய மத நிறுவனங்களின் வருமானத்தில் அறநிலையத்துறை கைவைப்பது இல்லை. சர்ச், மசூதி, சொத்துக்களின் வருமானம் அரசு சார்பற்ற வக்பு வாரியம், கிறிஸ்துவ சபைகளால் சுயேச்சையாக நிர்வாகம் செய்யப்படுகின்றன.

இதனால் கிறிஸ்துவ, முஸ்லீம்கள் கல்வி மற்றும் மருத்துவம் முலமாக மதப்பிரச்சாரம் செய்து கிறிஸ்துவ, முஸ்லீம் மதம் தமிழர்களிடையே வேகமாக பரப்பப்படுகிறது. தமிழர்களின் தாய்மதமான இந்து சமயம் அழிந்து வருகின்றது.

எனவே இந்து சமயக் கோயில்களை அரசு மற்றும் அரசியல் சார்பற்ற இந்து சமய சான்றோர்கள் உள்ளடக்கிய சுயேச்சை அதிகாரம் பெற்ற அறவோர் வாரியத்தை அமைக்க வேண்டும். இல்லையேல் சர்ச், மசூதி சொத்துக்களையும் அறநிலையத்துறை கையகப்படுத்த வேண்டும். இது விஷயத்தில் தமிழக முதல்வர் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு

என்றும் தேசப்பணியில்

சடையப்பன் பொன்னுசாமி

No comments:

Post a Comment