Sunday, 20 July 2014

அருள்மிகு கோவை கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோயில் ராஜ கோபுரத் திருப்பணி - கோரிக்கை மனு

அருள்மிகு கோவை கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோயில் ராஜ கோபுரத் திருப்பணி




கோரிக்கை மனு
21.07.2014
மனுதாரர்:
T.C.செந்தில் குமார் 093629 55888 
மாநிலச் செயலாளர்

பெறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்
முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை.

உயர்திரு. கோவை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) அவர்கள், கோவை

மாண்புமிகு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள்

உயர்திரு. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்கள்

வழி : உயர்திரு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் : 21.07.2014, கோவை

பொருள் : கோரிக்கை மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது

1. அருள்மிகு கோவை கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோயில் ராஜ கோபுரத் திருப்பணி துவங்கிட வேண்டுதல்

2. திருக்கோயிலுக்கு வரும் பிரதான சாலை நுழைவாயிலில் பூம்புகார் எதிரில் தோரணவாயில் கட்டுமானப் பணி துவங்கிட வேண்டுதல். இதற்குரிய உபயதாரர் தயாராக உள்ளார். கோவை மாநகராட்சியால் தோரண வாயில் அமைக்க அனுமதி அளிக்க வேண்டி சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த மனு மீதான உத்தரவு தாமதிக்கப்படுகிறது. உடனடியாக அனுமதி வழங்க வேண்டுதல்

3. திருக்கோயிலுக்கு வரும் பிரதான சாலையில் பக்தர்களுக்கு இடையூராகவும் சட்டவிரோதமாகவும் உள்ள சாலையோர கடைகளை அகற்றிட வேண்டுதல்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இது விஷயத்தில் நேரடியாக தலையிட்டு ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகளை நிறைவேற்றித் தரும்படி பணிந்து வேண்டுகிறோம்.

இப்படிக்கு
என்றும் தேசப்பணியில்

T.C.செந்தில் குமார்
நகல்கள் :
1. கோவை மாநகர காவல் துறை ஆணையர் அவர்கள்
2. செயல் அலுவலர், அருள்மிகு கோட்டை சங்கமேசுவரர் திருக்கோவில்
3. உயர்திரு. கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் சம்பந்தபட்ட துறை அதிகாரிகள், ஊடகங்கள்

No comments:

Post a Comment