மாண்புமிகு தமிழக முதல்வருக்கு கோரிக்கை.
ஸ்ரீ ராஜேந்திர சோழனுக்கு ஆயிரமாவது குரு பூஜை விழாவை அரசு விழாவாக நடத்துக!
மாமன்னன் ஸ்ரீ ராஜேந்திர சோழன் தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதற்காக இலங்கை முதல் கடாரம் வரை சோழப் பேரரசை நிலைநாட்டியவர். கடல் கடந்தும் காவி புலிக்கொடியை பறக்கவிட்டவர். பாரத நாட்டின் புகழ் பெற்ற மன்னராக திகழ்ந்தார். இவரால் உலகம் முழுக்க இந்து சமயம் இந்திய கலாச்சாரம் பரவியது.
ராஜராஜசோழனுக்குப்பிறகு அவரது மைந்தராகிய ஸ்ரீராஜேந்திர ழோசன் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கி ஏராளமான சிவலயங்களுக்கு திருப்பணி செய்து இந்திய வரலாற்றில் பொற்கால ஆட்சி நடத்தினார். தெற்காசிய நாடுகள் முழுவதும் தனது வலிமையான கடற்படை மூலம் தன் வசப்படுத்தினார்.
மலேசியவிலுள்ள கடாரம் பகுதியை வென்றதால் 'கடாரம் கொண்டான்' எனப் பெயர் பெற்றான். இவரது ஆட்சியில் விவசாயத்தை பெருக்குவதற்காக 'சோழகங்கம்' உள்ளிட்ட பல ஏரிகளையும் கால்வாய்களையும் வெட்டி 'சோழ நாடு சோறுடைத்து' என்கிற பெயரை நிலைநாட்டினார்.
ஓவியம், சிற்பம், இசை, நடனம், உள்ளிட்ட கலைகளை வளர்த்தார். இலங்கையில் 'மகிந்த' மன்னனை லென்று சோழப் பேரரசை இலங்கையிலும் நிலைநாட்டியவர். நீதி நெறி தவறாது தர்ம ஆட்சி நடத்தியவர். 50-வது வயதில் மாமன்னராய் பொறுப்பேற்று, தனது 80-வது வயதில் காஞ்சிபுரம் அருகிலுள்ள 'பிரம்மதேயத்தில் ' சிவனடி சேர்ந்தார்.
அன்னாரது 1000 ஆவது குருபூஜை கொண்டாடப்படும் இந்த நல்ல வேளையில் தமிழக அரசும் இந்த ஆண்டு முழுவதும்மிதனை அரசு விழாவாக கொண்டாடி சைவத்தின் பெருமையையும், தமிழின் பெருமையையும், ஸ்ரீ ராஜேந்திர சோழனின் பெருமையையும் உலகிறகு பறைசாற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்ரீ ராஜேந்திர சோழனின் திருப்பணியால் கட்டப்பெற்ற திருக்கோயில்கள், நீர் நிலைகள் அனைத்தும் புதுப்பொலிவு ஊட்டப்பெற்று தமிழின் பெருமையையும், ஸ்ரீ ராஜேந்திரனின் பெருமையையும் நிலைநாட்டிட வேணுமாய் தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
என்றும் தேசப்பணியில்
T.C.செந்தில்குமார்
No comments:
Post a Comment