Friday, 26 September 2014

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை தமிழ் முறைப்படி அவரது சமாதி நட்சத்திர தினமான வரும் ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று (04/11/2014) இந்து கலாச்சாரப்படி பசும்பொன்னில் உள்ள அவரது சமாதி திருக்கோயிலில் அரசு விழாவாக நடத்திட வேண்டி மனு



பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு, தமைமைச் செயலகம், சென்னை
வழி : மின்னஞ்சல் வழியாக

பொருள் : பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை தமிழ் முறைப்படி அவரது சமாதி நட்சத்திர தினமான வரும் ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று (04/11/2014) இந்து கலாச்சாரப்படி பசும்பொன்னில் உள்ள அவரது சமாதி திருக்கோயிலில் அரசு விழாவாக நடத்திட வேண்டி மனு சமர்ப்பிக்கபடுகின்றது.

மாண்புமிகு தமிழக முதல்வர் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்!

தெய்வீகத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை ஆங்கிலக் காலண்டர் படி வருடம் தோறும் அவர் உயிர் நீத்த அக்டோபர் 30-ம் தேதி அரசு விழாவாக நடத்தி வருகின்றார்கள். இது தேவர் கொள்கைகளுக்கு ஏற்புடையதல்ல! நினைவு நாள் கொன்டாடடுவது ஆங்கிலேயர்களின் கலாச்சாரமாகும்.

ஆங்கிலேயர்களை இந்தியாவைவிட்டு வெளியேற்றவே தன் வாழ்நாள் முழுவதும் முத்துராமலிங்கத் தேவர் போராடினார். அவரது போராட்டம் ஆங்கிலேயர்களை வெளியேற்றுவது மட்டுமின்றி சுதந்திர இந்தியாவில் தேசியமும் தெய்வீகமும் வளரவேண்டும் என நாட்டிற்காகவும் ஆன்மீகத்திற்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்!

அவர் இந்து சமய மற்றும் இந்து கலாச்சார மரபுகளை போற்றியதும் தன் வாழ்வில் திருமண பந்தமின்றி பிரம்மச்சரிய விரதம் பூண்டு தலை சிறந்த தவநெறி வாழ்க்கையை மேற்கொண்டு சித்தர்களை வழிபட்டு சித்தர் நெறியை போற்றி அமரரானவர்.

அவரது நினைவை போற்றும் வண்ணம் தமிழக அரசு ஆண்டு தோறும் ஆங்கில தேதிபடி அக்டோபர் 30ம் தேதி அன்று குருபூஜை நடத்துவது இந்து கலாச்சார மரபுபடி ஏற்புடையதல்ல! இந்து சமய கலாச்சாரப்படி ஒருவர் உயர்நீத்த நாளுக்குரிய நட்சத்திரம், திதி ஆகியவைகளை அடிப்படையாக வைத்துதான் குருபூஜை நடக்கும்.

தேசிய வாதியாகவும், ஆன்மீக வாதியாகவும் விளங்கிய திரு.முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை இந்து கலாச்சாரப்படி அவர் உயிர்நீத்த ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாளன்று ஆண்டுதோறும் அரசு சார்பாக பசும்பொன் கிராமத்தில் அவரது சமாதிக் கோயிலில் குருபூஜை நடத்திட வேண்டும் என நூறு கோடி இந்துக்களின் சார்பாக பணிவுடன் வேண்டுகின்றோம்.

என்றும் இறைபணியில்
திரு.சோலைக்கண்ணன்   
 
அன்புடன் ,
அர்ஜுன் சம்பத்
(இந்து மக்கள் கட்சி).

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜ் விவகாரத்தில் ஈழ இந்துத் தமிழர்களை தொடர்பு படுத்துவதற்கு கடும் கண்டனம்.



பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜ் விவகாரத்தில் ஈழ இந்துத் தமிழர்களை தொடர்பு படுத்துவதற்கு கடும் கண்டனம்.

தேதி : 26.09.2014

புகார்மனு மற்றும் செய்திக்குறிப்பு

பெறுநர்

மாண்புமிகு பாரதப் பிரதமர் திருமிகு. நரேந்திரமோடி அவர்கள்
சவுத் பிளாக், செக்ரடேரியட் பில்டிங், ரெய்சினா ஹில், புதுதில்லி.

பொருள் : பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜ் விவகாரத்தில் ஈழ இந்துத் தமிழர்களை தொடர்பு படுத்துவதற்கு கடும் கண்டனம்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திருமிகு. நரேந்திரமோடி அவர்களுக்கு,

வணக்கம், இலங்கையின் பூர்வ குடிகளாகிய இந்துத் தமிழர்கள் சிங்கள பௌத்த பேரினவாத ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஒரு நூற்றாண்டு காலமாக போராடி வருகின்றனர்.

இந்திய இந்துத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் சுதந்திரத்திற்கு பிறகு பௌத்தப் பேரினவாத அரசாங்கத்தின் கீழ் சம உரிமையின்றி அடிமைபடுத்தப்பட்டு கிடக்கின்றனர். இனவெறிக் கொள்கைகளை கடைபிடிக்கும் கொழுப்பு சிங்கள அரசாங்கம் இலங்கை இந்து தமிழினத்தை பூண்டோடு அழிக்க திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. 

இலங்கை தமிழர்கள் என்றும் எப்போதும் இந்தியத் திருநாட்டை தங்கள் தாய்நாடாக கருதி செயல்பட்டு வருபவர்கள். ஆனால் சிங்களவர்கள் இந்திய நாட்டை எதிரி நாடாகக் கருதியே செயல்பட்டு வருகிரார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 'எதிரிக்கு எதிரி நண்பன்' எனும் அடிப்படையில் இந்தியாவின் எதிரி நாடுகளோடு நேசக்கரம் பூண்டவர்கள் சிங்களவர்கள். 

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா சந்தித்த (பாகிஸ்தான் - சீனா - வங்க தேச யுத்த காலகட்டங்களில் ஈழ இந்துத் தமிழர்கள் இந்திய திருநாட்டை ஆதரித்தனர் என்பதும், சிங்களவர்கள் இந்தியாவை எதிர்த்து பாகிஸ்தான் - சீன நாடுகளோடு நட்பு கொண்டதும் வரலாறாகும்.

ஈழத் தமிழர்கள் நடத்திய அமைதி வழி விடுதலைப் போராட்டங்களின் போதும் சரி ஆயுத வழி விடுதலைப் போராட்டங்களின் போதும் சரி இந்திய நாட்டின் நலன் சார்ந்தே தங்களது சுதந்திரப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளோ அமைதி வழிப்போராளிகளோ ஒருபோதும் பாகிஸ்தானுக்கோ, சீனாவுக்கோ துணை போனதில்லை. 

மேலும் விடுதலைப் புலிகளின் சுதந்திர தமிழீழ அரசு இலங்கையில் செயல்பட்ட காலகட்டங்களில் தமிழீழத்திற்கு எதிரான முஸ்லீம்களை தமிழீழத்திலிருந்து முழுமையாக வெளியேற வேண்டுமென உத்தரவு பிறப்பித்தவர் புலிகளின் தலைவர் பிரபாகரன். ஆனால் ISI உளவு அமைப்பும், சீன உளவுத்துறையும் கொழும்பில் முகாம் அமைத்து முழுமையாக செயல்பட உத்தரவிட்டு உதவி வருபவர் சிங்கள அதிபர் இராஜபக்சே.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி கொழும்பில் பாகிஸ்தான் ISI உளவாளிகளால் பயிற்றுவிக்கப்பட்ட்வர் என்பது புலனாய்வில் தெளிவாகின்றது. மேலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் ISI உளவு ஸ்தாபனத்திற்கு இலங்கை அரசு மறைமுகமாக உதவி வருகிறது என்பது ஊரறிந்த உண்மை.

இராஜபக்சே கட்சியும், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைந்து போட்டியிட்டு இராஜபக்சே அரசு பெரும்பான்மை பெற்றதும் ஈழத் தமிழர்களின் தொன்மை தாயகமான கிழக்கு மாகாணத்தில் இராஜபக்சே உதவியுடன், முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருப்பதும் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்றுள்ள அரசியல் நிகழ்வுகளாகும்.

இந்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது பழிசுமத்தும் முறையிலும் இந்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் ISI உளவாளி அருண் செல்வராஜை விடுதலைப் புலிகள் இயக்கத்தோடும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடும் தொடர்பு படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்தியாவில் உள்ள இராஜபக்சே ஆதரவாளர்கள் சிலர் இத்தகைய விஷமப் பிரச்சாரத்தை செய்து வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அருண் செல்வராஜுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை இந்து மக்கள் கட்சி தெளிபடுத்த விரும்புகிறது. இலங்கை பிரச்சினைக்கும், தமிழக மீனவர் பிரச்சனைக்கும் தனித் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்பதை இந்து மக்கள் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.

பாகிஸ்தானால் பாதிக்கப்பட்ட வங்கதேச முஸ்லீம்களுக்காக திருமதி.இந்திரா காந்தியால் பங்களாதேஷ் உருவாக்கப்பட்டதுபோல நரேந்திரமோடி அவர்கள் இலங்கை இந்துத் தமிழர்களுக்காக தனித் தமிழ் ஈழம் அமைத்துத் தர வேண்டும் என இந்து மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

என்றும் இறைபணியில்

 
அன்புடன் ,
அர்ஜுன் சம்பத்
(இந்து மக்கள் கட்சி).

Thursday, 25 September 2014

ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஒரவஞ்சனையுடன் நடந்து கொள்ளும் ஒமர் அபுதுல்லா அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்யக் கோருதல் தொடர்பாக கோரிக்கை மனு

31/09/2014
புகார்மனு
பெறுநர்
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள்
கோட்டை, புதுதில்லி
வழி : அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள்
ஐயா,
பொருள் : ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஒரவஞ்சனையுடன் நடந்து கொள்ளும் ஒமர் அபுதுல்லா அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்யக் கோருதல் தொடர்பாக கோரிக்கை மனு
வரலாறு காணாத வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலைத்தில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் வீடிழந்து வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது.
போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா அரசாங்கம் செயல்படாத அரசாங்கமாக இருக்கிறது. முழுக்க முழுக்க நிவாரண நிதியை முறைகேடாகக் கையாள்கிறார்.
நிவாரணப்பணி நிதியில் பெருமளவு கையாடல் நடக்கிறது. உமர் அப்துல்லா அரசு பிரிவினைவாதிகளுக்கும் பயங்கர வாதிகளுக்கும் ஊக்கம் தரும் வகையில் செயல்பட்டுவருகிறது.
உயிரைப் பணயம் வைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவரும் ராணுவத்தினருக்கு எதிராக நடைபெறும் கல்லெறிதல், தாக்குதல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாது வன்முறையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகிறார்.
இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் குறிப்பாக ஜம்மு பகுதிக்கு போதிய நிதியை ஒதுக்காமல் ஓரலஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறார். மேலும் மாநில அரசு உமர் அப்துல்லாவின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் வெளிப்படையாக அவரே தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு நிவாரணப்பணி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி நிதியை ஒதுக்குவது பாகிஸ்தானுக்கும், இந்திய இறையாண்மைக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
எனவே உமர் அப்துல்லா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும், நிவாரணப் பணிகளை ராணுவம் மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசே நேரடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ல வேண்டும் எனவும்
இந்துக்கள் வசிக்கும் ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களை இந்து மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

IMK Supremo, Arjun Sampath Congratulations for ANNADURAI for MANGALYAN Victory




பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை தமிழ் முறைப்படி அரவது சமாதி நட்சத்திர தினமான வரும் ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று (04/11/2014) இந்து கலாச்சாரப்படி பசும்பொன்னில் உள்ள அவரது சமாதி திருக்கோயிலில் அரசு விழாவாக நடத்திட வேண்டி மனு

திரு.சோலைக்கண்ணன்
Cell : 9952248229
மதுரை மாவட்டத் தலைவர்
கோரிக்கைமனு
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு, தமைமைச் செயலகம், சென்னை
வழி : மின்னஞ்சல் வழியாக
பொருள் : பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை தமிழ் முறைப்படி அரவது சமாதி நட்சத்திர தினமான வரும் ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று (04/11/2014) இந்து கலாச்சாரப்படி பசும்பொன்னில் உள்ள அவரது சமாதி திருக்கோயிலில் அரசு விழாவாக நடத்திட வேண்டி மனு சமர்ப்பிக்கபடுகின்றது.
மாண்புமிகு தமிழக முதல்வர் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்!
தெய்வீகத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை ஆங்கிலக் காலண்டர் படி வருடம் தோறும் அவர் உயிர் நீத்த அக்டோபர் 30-ம் தேதி அரசு விழாவாக நடத்தி வருகின்றார்கள். இது தேவர் கொள்கைகளுக்கு ஏற்புடையதல்ல! நினைவு நாள் கொன்டாடடுவது ஆங்கிலேயர்களின் கலாச்சாரமாகும்.
ஆங்கிலேயர்களை இந்தியாவைவிட்டு வெளியேற்றவே தன் வாழ்நாள் முழுவதும் முத்துராமலிங்கத் தேவர் போராடினார். அவரது போராட்டம் ஆங்கிலேயர்களை வெளியேற்றுவது மட்டுமின்றி சுதந்திர இந்தியாவில் தேசியமும் தெய்வீகமும் வளரவேண்டும் என நாட்டிற்காகவும் ஆன்மீகத்திற்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்!
அவர் இந்து சமய மற்றும் இந்து கலாச்சார மரபுகளை போற்றியதும் தன் வாழ்வில் திருமண பந்தமின்றி பிரம்மச்சரிய விரதம் பூண்டு தலை சிறந்த தவநெறி வாழ்க்கையை மேற்கொண்டு சித்தர்களை வழிபட்டு சித்தர் நெறியை போற்றி அமரரானவர்.
அவரது நினைவை போற்றும் வண்ணம் தமிழக அரசு ஆண்டு தோறும் ஆங்கில தேதிபடி அக்டோபர் 30ம் தேதி அன்று குருபூஜை நடத்துவது இந்து கலாச்சார மரபுபடி ஏற்புடையதல்ல! இந்து சமய கலாச்சாரப்படி ஒருவர் உயர்நீத்த நாளுக்குரிய நட்சத்திரம், திதி ஆகியவைகளை அடிப்படையாக வைத்துதான் குருபூஜை நடக்கும்.
தேசிய வாதியாகவும், ஆன்மீக வாதியாகவும் விளங்கிய திரு.முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை இந்து கலாச்சாரப்படி அவர் உயிர்நீத்த ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாளன்று ஆண்டுதோறும் அரசு சார்பாக பசும்பொன் கிராமத்தில் அவரது சமாதிக் கோயிலில் குருபூஜை நடத்திட வேண்டும் என நூறு கோடி இந்துக்களின் சார்பாக பணிவுடன் வேண்டுகின்றோம்.
என்றும் இறைபணியில்
திரு.சோலைக்கண்ணன்

பொது மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து - அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டி கோரிக்கை மனு



பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு, தமைமைச் செயலகம், சென்னை

வழி : மின்னஞ்சல் வழியாக

பொருள் : பொது மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து - அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டி கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்படுகின்றது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு,

வணக்கம், மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பொது மக்களுக்கு அன்றாட அத்தியாவசிய அடிப்படைத் தேவையான பால் மற்றும் பால் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விநியோகிக்கும் ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக மக்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளின் உயிரோடு விளையாடியுள்ளனர். இது மன்னிக்க முடியாது மகா கொடூரம். பச்சைக் குழந்தைகள் அருந்தும் பாலில் கலப்படம் செய்த பாவிகளை தண்டிக்க வேண்டுகிறோம்.

* ஆவின் பாலில் 20%க்கும் மேல் தண்ணீர் கலந்து அந்தப் பாலை தனியார் பால் நிறுவனங்களுக்கு விற்றதன் மூலம் கோடிக் கணக்கான ரூபாய்கள் மோசடி.
* பால் பதப்படுத்தலுக்கு உணவு கலப்படச் சட்டத்தையும் மீறி பார்மாலின் போன்ற பொருட்களை பயன்படுத்தி ஆவின் பாலின் தரத்தை விஷமாக்கி பாமர மக்களின் உடல் நலனுக்கு கேடு விளைவித்தது.
* ஆவின் பாலகங்கள் வழங்கியதில் கோடிக்கணக்கில் மோசடி செய்தது.
* ஆவின் பால் போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் மோசடி, முறைகேடு செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது.
* முறைகேடுகளில் ஈடுபட்ட சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வைத்தியலிங்கத்தோடு கூட்டணி அமைத்து செயல்பட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இது விஷயத்தில் நேரடியாக தலையிட்டு மோசடி நபர்களிளை குண்டர்கள் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து தேசிய உடைமையாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் இறைபணியில்

திரு.தேவகோவிந்தராஜ்

Ban Meat Shops and Liqours shops on Ramalinga adigalar Vallalar Birthday - IMK Demands



பொருள் : வள்ளலார் பிறந்த நாளன்று மதுமாமிசக் கடைகளை மூடி உத்தரவு பிறப்பிக்க வேண்டி மனு சமர்ப்பிக்கபடுகின்றது.

தேதி : 26.09.2014

T.C.செந்தில்குமார்
Cell : 9362955888
மாநில செயலாளர்

கோரிக்கைமனு

பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு, தமைமைச் செயலகம், சென்னை

வழி : மின்னஞ்சல் வழியாக

பொருள் : வள்ளலார் பிறந்த நாளன்று மதுமாமிசக் கடைகளை மூடி உத்தரவு பிறப்பிக்க வேண்டி மனு சமர்ப்பிக்கபடுகின்றது.

மாண்புமிகு தமிழக முதல்வர் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்!
வரும் 05.10.2014-ம் தேதி தமிழகத்தின் தவப்புதல்வன், சன்மார்க்க சங்க நிறுவனர், காருண்யா மூர்த்தி - வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடி நின்ற வள்ளலாரின் அவதார நாளாகும். இராமலிங்க அடிகளார் எனும் இயற்பெயர் கொன்ட வள்ளலார் கொல்லாமை நெறியை உலகிற்கு போதித்த உத்தமர் ஆவார் தமிழகம் மட்டுமல்லாமல் மனித குலம் முழுமைக்குமான சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர். மக்களின் பசிப்பினி போக்க வடலூரில் சத்திய ஞான தரும சாலையை நிறுவியவர். தமிழக அரசும் வள்ளலார் கொள்கைகளை போற்றும் வகையில் வருடந்தோறும் அவரது அவதார நாளில் மது மாமிச கடைகளை மூடி மரியாதை செலுத்தி வருகின்றது.
இந்த ஆண்டு யதேச்சையாக முஸ்லீம்கள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகை நாளும், வள்ளலார் பிறந்த நாளும் ஒரே தினத்தில் வருகின்றது. மேற்படி நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டும் உள்ளது. இசுலாமியர்களின் பக்ரீத் பண்டிகை தினத்தன்று ஆடு மற்றும் ஒட்டகங்களை பலியிட்டு (குர்பானி கொடுத்து) அதன் மாமிசங்களை உண்பார்கள் இது அவர்களின் வழக்கம் சகிப்புத்தன்மை கொண்ட தமிழக மக்களுக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் வள்ளலார் அவாதார தினத்தில் வழக்கம்போல மதுமாமிச விற்பனையை தமிழக அரசு தடை செய்து மது மாமிசக் கடைகளை மூட வேண்டும். அரசு வதைக்கூடங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள், மாமிசக்கடைகள் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும். ஒட்டகம் ஆடுகள் ஆகிய்வற்றை பலியிடுவதையும் தடை செய்ய வேண்டும். தமிழக அரசின் சார்பில் வழக்கம் போல வள்ளலார் பிறந்த நாளன்று மதுமாமிசக் கடைகளை மூடி உத்தரவு பிறப்பித்து வள்ளலாருக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
மஹாவீரர், புத்தர் ஆகியோரது பிறந்த நாளன்றும் மது மாமிசக்கடைகள் மூடப்படுகின்றது என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.
பக்ரீத் என்பது பிறைபார்த்து கொண்டாடப்படும் நாளாகும். இசுலாமிய மதத்தலைவர்கள் பக்ரீத் நாளை நிர்ணயிப்பார்கள். இது மாறுதலுக்குட்பட்டது. ஆனால் வள்ளலார் அவதார நாள் அக்டோபர் 5 என்பது மாறுதலுக்குட்பட்டது அல்ல. இசுலாமியர்களில் சிலரும் வள்ளலார் கொள்கையை ஆதரிப்பவர்கள்.
மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பெரும்பான்மை ஆள வேண்டும் சிறுபான்மை வாழ வேண்டும் என்கிற கோட்டின்படி செயல்படுபவர் ஆவார்கள். எனவே வள்ளலாருக்கு வருடந்தோறும் செய்யும் மரியாதையை செய்திட வேண்டுகிறோம்.
என்றும் இறைபணியில்

அர்ஜீன் சம்பத் ஜி அவர்களின் இல்லத்தில் - நவராத்திரி கொலு



நவராத்திரி கொலு**இந்து மக்கள் கட்சி-தமிழகம்**தலைவர்"தமிழ்திரு"அர்ஜீன் சம்பத் ஜி அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டது++ஓம் சக்தி பராசக்தி

மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோரிக்கை மனு - Indhu People Party Demands to Withdraw the proposed rise in Electrical Charges

https://www.facebook.com/photo.php?fbid=716536455095385&set=a.184206001661769.47522.100002171102976&type=1
திரு.தேவகோவிந்தராஜ் 
Cell : 90430 58899
மாநில துணைத் தலைவர்
கோரிக்கை மனு
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு, தமைமைச் செயலகம், சென்னை
வழி : மின்னஞ்சல் வழியாக
பொருள் : மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்படுகின்றது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு,
வணக்கம், தமிழகம் ஏற்கனவே மின் பற்றாக்குறையாலும், மின்தடையாலும் மிக கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற மாநிலம் ஆகும். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்குப்பின் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் திராவிட இயக்கங்களின் ஆட்சிக்காலத்தில் துவக்கப்படவில்லை. இதுவிஷயத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இருகட்சிகளும் பெரிதாக அக்கறை எதுவும் எடுக்கவில்லை. மின்வாரியம் நிர்வாக சீர்கேடுகளாலும், மின் திருட்டு உள்ளிட்ட காரணங்களாலும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கி மின்பற்றாக்குறையை அவ்வப்போது சமாளித்துவந்தனர். புதிய மின் உற்பத்தி திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் முழுமின்சாரமும் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை. இயங்கிவரும் மின் உற்பத்தி நிலையங்களும் திடீர் திடீர் என பழுதாகிவிடுகின்றன.
மின்வெட்டின் காரணமாக தமிழக முழுவதும் தொழிற்சாலைகளும் விவசாயமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இயந்திரப் பணிமனைகளுக்கான மின்கட்டண உயர்வு 15% க்கும் மேல் உயர்த்தப்பட்ட உள்ளதாக மின்வாரிய மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
எனவே மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற்று தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டுமென்று தமிழக முதல்வரை இந்து மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய கருத்துக்கேட்புக் கூட்டத்தில் இந்த கட்டண உயர்வை இ.ம.க. கடுமையாக எதிர்க்கும். இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெறாவிடில் தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
என்றும் இறைபணியில்

Arjun Sampath, Indhu Makkal Katchi Supremo, Congratulations to ISRO Scientists for mangalyan Victory


Tuesday, 23 September 2014

இந்து அருந்ததிய மக்களின் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோரிக்கை மனு

திரு.தேவராஜ்    87960 71184                                             23.08.2014 அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர்  கோரிக்கை மனு  பொறுநர்  மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்  முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை.  பொருள் : இந்து அருந்ததிய மக்களின் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி  கோரிக்கை மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.   இந்து மக்கள் கட்சி கொங்கு நாடு அருந்ததியர் முன்னேற்றக் கழகம் அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட திருக்குலத்தோர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி அதிலும் குறிப்பாக அருந்ததிய மக்களின் கோரிக்கைகளை முன்னிருத்தி வருகின்ற 26.08.2014 (செவ்வாய்கிழமை) காலை 11.00 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது.  ஒட்டு மொத்த மக்கள் தொகையில் முப்பது சதவிகிதம் மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆவார்கள் (திருக்குலத்தோர்). அனால் 18 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படுகிறது.  எனவே தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாக உயர்த்தித்தரவேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இது சம்மந்தமாக மத்திய அரசின் கவனைத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற உள்ளது.  மேலும் துப்புரவு தொழிலாளர்களாகவும், பாத அணி தயாரிப்பாளர்களாகவும், பெரும்பாண்மையான அருந்ததிய மக்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்குரிய வாழ்வுரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்.   தலித் அமைப்புக்கள் என்கிற போர்வையில் கிருஸ்தவ தொண்டு நிறுவனங்களும், நாத்திக கம்யூனிஸ அமைப்புக்களும் அருந்ததிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து வருகின்றனர். கிருஸ்தவ அமைப்புக்களின் இத்தகைய நடவடிக்கைகள் தடை செய்யப்பட வேண்டும்.  நிகழ்ச்சியின்போது மத்திய மாநில அரசுகளுக்கு முன் வைக்கப்படும் 10 அம்ச கோரிக்கைகள் பின்வருமாறு.  1. இந்து தாழ்த்தப்பட்ட அரிஜன மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டுச் சலுகையை 18% லிருந்து 30% ஆக உயர்திட மத்திய அரசை வலியுறுத்தியும் 2. இந்து தாழ்த்தப்பட்ட அரிஜன மக்களின் இடஒதுக்கீட்டில் இந்து அருந்ததியர்களுக்கு 6% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தியும் 3. இந்து அரிஜன் இடஒதுக்கீட்டில் வழங்கப்படும் சலுகைகளை மதம் மாறியவர்களுக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தியும், 4. இந்து அரிஜன இட ஒதுக்கீட்டில் பலன் பெற்றுவிட்டு மாற்று மதத்தினை பின்பற்றுபவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரியும், 5. அரிஜன மக்களின் இடஒதுக்கீட்டு சலுகையை ஏற்கனவே அனுபவித்தவர்களின் வாரிசுகளுக்கு வழங்காமல் முதல் முறையாக பலன் பெருவோருக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும்  6. அரிஜன மக்களுக்கு பட்டா, வீடு, விவசாய நிலம்  வழங்கிட மாநில அரசினை வலியுறுத்தியும்  7. கோவை நீதி மன்றத்திற்கு அருகிலே பாரதரத்னா அண்ணல் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் திரு உருவச்சிலையை நிறுவிடக் கோரியும். 8.  தமிழக அரசில் அருந்ததியர் நலத்துறை உருவாக்கப்பட்டு தனி அமைச்சர் மற்றும் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட கோரியும். 9.  இந்து திருக்கோயில்களில் அருந்ததிய மக்களுக்குரிய உரிமைகளும் மரியாதைகளும் காப்பாற்றப்பட வேண்டும், அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் கோயில்கள் கட்டிட நிதி உதவி செய்ய கோரியும் 10. இன்னும் கிராமப்புற பகுதிகளில் நிலவி வரும் இரட்டை குவளை உள்ளிட்ட நவீன தீண்டாமை இழிவுகளை ஒழித்துக்கட்ட வேண்டும்   கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு இ.ம.க நிறுவனத் தலைவர் தமிழ்த்திரு. அர்ஜுன் சம்பத் தலைமை தாங்குகிறார். கொங்கு நாடு அருந்ததிய முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.இளங்கோவன் அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் திரு.தேவராஜ் உள்ளிட்ட இந்து அருந்ததிய சமுதாயத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். ஒட்டு மொத்த இந்து சமுதாயமும் அருந்ததிய மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க  ஒத்துழைக்க வேண்டுகிறோம். என்றும் தேசப்பணியில் நகல் : சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள்
பொறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்
முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை.

பொருள் : இந்து அருந்ததிய மக்களின் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி  கோரிக்கை மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்து மக்கள் கட்சி கொங்கு நாடு அருந்ததியர் முன்னேற்றக் கழகம் அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட திருக்குலத்தோர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி அதிலும் குறிப்பாக அருந்ததிய மக்களின் கோரிக்கைகளை முன்னிருத்தி வருகின்ற 26.08.2014 (செவ்வாய்கிழமை) காலை 11.00 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த மக்கள் தொகையில் முப்பது சதவிகிதம் மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆவார்கள் (திருக்குலத்தோர்). அனால் 18 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படுகிறது.  எனவே தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாக உயர்த்தித்தரவேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இது சம்மந்தமாக மத்திய அரசின் கவனைத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேலும் துப்புரவு தொழிலாளர்களாகவும், பாத அணி தயாரிப்பாளர்களாகவும், பெரும்பாண்மையான அருந்ததிய மக்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்குரிய வாழ்வுரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். 
தலித் அமைப்புக்கள் என்கிற போர்வையில் கிருஸ்தவ தொண்டு நிறுவனங்களும், நாத்திக கம்யூனிஸ அமைப்புக்களும் அருந்ததிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து வருகின்றனர். கிருஸ்தவ அமைப்புக்களின் இத்தகைய நடவடிக்கைகள் தடை செய்யப்பட வேண்டும்.
நிகழ்ச்சியின்போது மத்திய மாநில அரசுகளுக்கு முன் வைக்கப்படும் 10 அம்ச கோரிக்கைகள் பின்வருமாறு.

1. இந்து தாழ்த்தப்பட்ட அரிஜன மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டுச் சலுகையை 18% லிருந்து 30% ஆக உயர்திட மத்திய அரசை வலியுறுத்தியும்
2. இந்து தாழ்த்தப்பட்ட அரிஜன மக்களின் இடஒதுக்கீட்டில் இந்து அருந்ததியர்களுக்கு 6% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தியும்
3. இந்து அரிஜன் இடஒதுக்கீட்டில் வழங்கப்படும் சலுகைகளை மதம் மாறியவர்களுக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தியும்,
4. இந்து அரிஜன இட ஒதுக்கீட்டில் பலன் பெற்றுவிட்டு மாற்று மதத்தினை பின்பற்றுபவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரியும்,
5. அரிஜன மக்களின் இடஒதுக்கீட்டு சலுகையை ஏற்கனவே அனுபவித்தவர்களின் வாரிசுகளுக்கு வழங்காமல் முதல் முறையாக பலன் பெருவோருக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும் 
6. அரிஜன மக்களுக்கு பட்டா, வீடு, விவசாய நிலம்  வழங்கிட மாநில அரசினை வலியுறுத்தியும் 
7. கோவை நீதி மன்றத்திற்கு அருகிலே பாரதரத்னா அண்ணல் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் திரு உருவச்சிலையை நிறுவிடக் கோரியும்.
8.  தமிழக அரசில் அருந்ததியர் நலத்துறை உருவாக்கப்பட்டு தனி அமைச்சர் மற்றும் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட கோரியும்.
9.  இந்து திருக்கோயில்களில் அருந்ததிய மக்களுக்குரிய உரிமைகளும் மரியாதைகளும் காப்பாற்றப்பட வேண்டும், அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் கோயில்கள் கட்டிட நிதி உதவி செய்ய கோரியும்
10. இன்னும் கிராமப்புற பகுதிகளில் நிலவி வரும் இரட்டை குவளை உள்ளிட்ட நவீன தீண்டாமை இழிவுகளை ஒழித்துக்கட்ட வேண்டும்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு இ.ம.க நிறுவனத் தலைவர் தமிழ்த்திரு. அர்ஜுன் சம்பத் தலைமை தாங்குகிறார். கொங்கு நாடு அருந்ததிய முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.இளங்கோவன் அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் திரு.தேவராஜ் உள்ளிட்ட இந்து அருந்ததிய சமுதாயத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். ஒட்டு மொத்த இந்து சமுதாயமும் அருந்ததிய மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
என்றும் தேசப்பணியில்
நகல் : சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள்

இந்து மக்கள் கட்சி சார்பில் மலைவாழ்மக்களுக்கு கோனியம்மன் கோயிலில் சிறப்பு மரியாதை - கூட்டு வழிபாடு மற்றும் கருத்தரங்கத் தீர்மானங்கள் கோரிக்கை

Photo

திரு.தேவகோவிந்தராஜன் 90430 58899                                  21.08.2014
மாநில துணைத்தலைவர்

கோரிக்கை மனு

பொறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்
முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை.

பொருள் : இந்து மக்கள் கட்சி சார்பில் மலைவாழ்மக்களுக்கு கோனியம்மன் கோயிலில் சிறப்பு மரியாதை - கூட்டு வழிபாடு மற்றும் கருத்தரங்கத் தீர்மானங்கள் கோரிக்கை மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.

கோவையின் ஆதிகுடிமக்களான இருளர்கள், காடர்கள், தொதுவர்கள் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் மற்றும் வனவாசி மக்களின் தலைவர்களில் ஒருவரான கோவன் என்பவர் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாக அமைத்த ஆலயம் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலாகும். கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலின் ராஜகோபுர கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததை தொடர்ந்து நடைபெற்று வரும் மண்டலபூஜைத் திருவிழாவின் 43-ம் நாள் பூஜையின் போது (23.08.2014 சனிக்கிழமை) காலை 11.00 மணியளவில் கோவையின் பூர்வ குடிமக்களான மலைவாழ்மக்கள் மற்றும் வனவாசி மக்களை கௌரவிக்க இந்து மக்கள் கட்சி சார்பில் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பல நூறு ஆண்டுகளாக வசிக்கும் இந்து மலைவாழ் மற்றும் வனவாசி மக்கள் சார்பில் பழங்குடி இன மக்களின் தலைவர்களான மூப்பர்கள் பலர் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளுடன் வழிபாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். ஆதிகுடிமக்களுக்கு இ.ம.க சார்பில் சிறப்பு மரியாதைகளும், கூட்டு வழிபாடும் செய்யப்படுகிறது.
மேற்படி சிறப்பு மிக்க விழா பேரூர் ஆதீனம் தவத்திரு. சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் ஆகியோரது நல்லாசிகளுடனும் பேரூர் ஆதீனம் இளையபட்டம் தவத்திரு. மருதாச்சல அடிகளார், காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேசுவர சுவாமிகள், பிள்ளையார் பீடம் தவத்திரு. பொன்மணி வாசக அடிகளார், வாரஹி பீடம் தவத்திரு.மணிகண்ட சுவாமிகள், லலிதாம்பிகை பீடம் தவத்திரு. ஜகனாத சுவாமிகள், குபேரீசுவரர் அறக்கட்டளை பிரசன்ன சுவாமிகள், கந்த லோகம் சிவசுப்பிரமணியம் அறக்கட்டளை தவத்திரு.பாஸ்கர சுவாமிகள், மலுமிச்சம்பட்டி நாகசக்தி பீடம் தவத்திரு.சிவசன்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் உள்ளிட்ட இந்து சமய குருமார்கள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக 23.08.2014 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மேற்கு தொடர்ச்சி மலைவாழ் மக்கள் மற்றும் வனவாசி மக்களின் கோரிக்கை கருத்தரங்கம் கோவை R.S.புரம், சுப்பிரமணியம் தெருவில் உள்ள இ.ம.க. தலைமை அலுவலகத்தில் தமிழ்த்திரு. அர்ஜுன்சம்பத் தலைமையில் நடைபெற உள்ளது. கருத்தரங்கில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் பின்வருமாறு.

* கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பாரம்பரியமாக வசிக்கும் வனவாசி மற்றும் மலைவாழ் மக்களான இருளர், காடர், துதுவர் உள்ளிட்ட பூர்வகுடி மக்களின் வாழ்வுரிமை மற்றும் பாரம்பரியம் கலாச்சாரம் வழிபாடு ஆகியவை போற்றி பாதுகாத்திட வேண்டும். 

* வனவாசி மக்களைடையே கிறிஸ்துவ தொண்டு நிற்வனங்கள் மோசடி மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை தடை செய்ய வேண்டும்.

* மலை வாழ் மக்களுக்குண்டான இட ஒதுக்கீட்டை மதம் மாறி சென்ற போலிகள் அபகரித்துக் கொள்கின்றனர். இத்தகைய மோசடி நடவடிக்கைகளிலிருந்து மலைவாழ் மக்களை பாதுகாக்க வேண்டும். 

* மலைவாழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை மேசடி ஆவனங்கள் மூலம் கைப்பற்றுவது தடைசெய்யப்படவேண்டும்.

* மலைவாழ் மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

* மலைவாழ் மக்களுக்கான கல்வி வேலை வாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

* தமிழகத்தில் மலைவாழ்மக்களுக்கான தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். 

* மேற்கு தொடர்ச்சி மலையில் மலைவாழ் மக்கள் வசிப்பிடங்களில் சூரிய விளக்கு சுகாதாரம், மருத்துவம், மின் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து தர்ம சேவா அறக்கட்டளை மற்றும் இ.ம.க. தொண்டர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள். அனைவரும் ஒத்துழைக்கும்படி வேண்டுகிறோம்.

என்றும் இறைபணியில்

நகல் : சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள்

Pramod Muthalik demand Save Hindu Leaders in Tamilnadu


Photo
Photo
 
Photo

இந்து மத நம்பிக்கைகள் மற்றும் குலசேகர பட்டிணம் தசரா விழா தொடர்பாக அவதூறான கருத்துக்களை வெளியிட்டு இந்து மத உணர்வுகளை புண்படுத்திய கிறித்துவ மத போதகர் மோகன் சி. லாசரஸ் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.


அர்ஜுன்சம்பத் இந்துமக்கள்கட்சி- தமிழகம்'s photo.

பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்
(வழி) மாவட்ட ஆட்சியாளர் அவர்கள்
__________________ மாவட்டம்

புகார்மனு

பொருள் : இந்து மத நம்பிக்கைகள் மற்றும் குலசேகர பட்டிணம் தசரா விழா தொடர்பாக அவதூறான கருத்துக்களை வெளியிட்டு இந்து மத உணர்வுகளை புண்படுத்திய கிறித்துவ மத போதகர் மோகன் சி. லாசரஸ் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,
வணக்கம், தமிழகத்தில் வரும் 24/09/2014 முதல் அக்டோபர் 03/10/2014 வரை தசரா திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள இலட்சக்கணக்கான தமிழர்கள் குலசேகர பட்டிணம் ஸ்ரீ முத்தூராம்மன் திருக்கோயிலில் கூடி தசரா திருவிழாவை சிறப்பாக விரதமிருந்து பன்னெடுங்காலமாக கொண்டாடி வருகின்றனர். 
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி கிராமத்தை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மோகன் சி.லாசரஸ் என்கிற கிறிஸ்தவ மதபோதகர் அவரது பின்மாரிமலர் என்னும் பத்திரிக்கையில் தசராவிழா குறித்தும், தசரா விழாவில் விரதமிருந்து வேடமணிந்து காணிக்கை செலுத்த வரும் தமிழர்கள் குறித்தும் அவதூறு கற்பிக்கும் வகையிலும் இந்து மத, சமய ஆன்மீக உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையிலும் எழுதி உள்ளார்.

இந்து மத உனர்வுகளை புண்படுத்தும் உள் நோக்கத்துடனும் தமிழகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற திட்டத்துடனும் மோகன் சிலாசரஸ் செயல்பட்டு வருகிறார்.

மேலும் கடந்த சில வருடங்களாகவே மோகன் சி.லாசரஸின் கிறிஸ்த்துவ மத, பிரச்சாரக் கூட்டங்களில், தமிழர் தெய்வங்களை "சாத்தான்கள்" என்றும் "பிசாசுகள்" என்றும் பகிரங்கமாக பேசியும் எழுதியும் வருகிறார். நாலுமாவடியில் அவர் நடத்துகிற  ஜெபக்கூட்டங்களின் போதும் தமிழகம் முழுக்க மோகன் சி.லாசரஸ் நடத்துகிற கிறிஸ்தவ மதபிரச்சாரங்களின் போதும், இந்துக் கடவுள்களை அவமதித்து பேசி வருகிறார். மேலும், அவர் பிரச்சாரம் செய்கின்ற ஆசிர்வாதம், மாதா, ஜீஸஸ், God, தமிழன், இமயம் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளில் இந்து சமயம் குறித்தும், தமிழர்களின் வழிபாடு குறித்தும், இந்துக் கடவுள்கள் குறித்தும் அவதூறு கற்பிக்கும் வகையிலும் தமிழக மக்களிடையே நிலவிவரும் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் செயல்பட்டுவருகிறார்.

தனக்கு பக்க பலமாக அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா-சின்னத்திரை நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களை வைத்தும் இத்தகைய காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். பல நோயாளிகளை குணப்படுத்துவதாக கூறி மோசடி செய்கிறார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கிறிஸ்தவ மத போதனைகளுக்காக நன்கொடைகள் பெற்று நிதி மோசடியிலும் ஈடுபட்டுவருகிறார். பல குடும்பங்கள் இவரை நம்பி ஏமாந்து வருகின்றனர். எனவே 
1. தமிழகத்தில் இவர் நடத்தும் மத பிரச்சாரக் கூட்டங்களை தடை செய்ய வேண்டும்.
2. மோகன் சி.லாசரஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் 
3. நிதிமோசடிகள் குறித்து விசாரித்து சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்.
4. இந்திய இறையாண்மைக்கு எதிராக இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசி முத்தாரம்மன் வழிபாட்டை கேவலப்படுத்திய மோகன் சி.லாசரஸை தேசிய பாதுகாப்பு தடைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் இறைபணியில்

தமிழ்திரு. அர்ஜுன் சம்பத்
நிறுவனர் - தலைவர்

இணைப்பு : பத்திரிக்கையில் வெளியான - செய்தி நகல்
 

ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஒரவஞ்சனையுடன் நடந்து கொள்ளும் ஒமர் அபுதுல்லா அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்யக் கோருதல் - ஜம்மு பகுதிக்கும் சரிசமமாக நிவாரணம் வழங்கிட கோருதல் தொடர்பாக கோரிக்கை மனு

அர்ஜுன்சம்பத் இந்துமக்கள்கட்சி- தமிழகம்'s photo.

தேதி : 31.09.2014

புகார்மனு

பெறுநர்
மாண்புமிகு பாரதப் பிரதமர் திருமிகு. நரேந்திரமோடி அவர்கள்
சவுத் பிளாக், செக்ரடேரியட் பில்டிங், ரெய்சினா ஹில், புதுதில்லி.

வழி :  தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள  அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் வழியாக

பொருள் : ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஒரவஞ்சனையுடன் நடந்து கொள்ளும் ஒமர் அபுதுல்லா அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்யக் கோருதல் - ஜம்மு பகுதிக்கும் சரிசமமாக நிவாரணம் வழங்கிட கோருதல் தொடர்பாக கோரிக்கை மனு

மாண்புமிகு பாரதப் பிரதமர் திருமிகு. நரேந்திரமோடி அவர்களுக்கு,

வணக்கம், வரலாறு காணாத வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலைத்தில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் வீடிழந்து வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர்.
போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவின் மாநில அரசாங்கம் செயல்படாத நிலையில் இருக்கிறது. முழுக்க முழுக்க நிவாரண நிதியை முறைகேடாகக் கையாள்கிறார். நிவாரணப்பணி நிதியில் பெருமளவு கையாடல் நடக்கிறது. 
உமர் அப்துல்லா அரசு பிரிவினைவாதிகளுக்கும் பயங்கர வாதிகளுக்கும் ஊக்கம் தரும் வகையில் செயல்பட்டுவருகிறது. உயிரைப் பணயம் வைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவரும் ராணுவத்தினருக்கு எதிராக நடைபெறும் கல்லெறிதல், தாக்குதல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாது வன்முறையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகிறார்.
இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் குறிப்பாக ஜம்மு பகுதிக்கு போதிய நிதியை ஒதுக்காமல் ஓரலஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறார். மேலும் மாநில அரசு உமர் அப்துல்லாவின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் வெளிப்படையாக அவரே தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு நிவாரணப்பணி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி நிதியை ஒதுக்குவது பாகிஸ்தானுக்கும், இந்திய இறையாண்மைக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
எனவே உமர் அப்துல்லா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும், நிவாரணப் பணிகளை ராணுவம் மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசே நேரடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
இந்துக்கள் வசிக்கும் ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களை இந்து மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..
என்றும் இறைபணியில்
அர்ஜுன்சம்பத் இந்துமக்கள்கட்சி- தமிழகம்'s photo.

தேதி : 31.09.2014

புகார்மனு

பெறுநர்
மாண்புமிகு பாரதப் பிரதமர் திருமிகு. நரேந்திரமோடி அவர்கள்
சவுத் பிளாக், செக்ரடேரியட் பில்டிங், ரெய்சினா ஹில், புதுதில்லி.

வழி :  தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள  அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் வழியாக

பொருள் : ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஒரவஞ்சனையுடன் நடந்து கொள்ளும் ஒமர் அபுதுல்லா அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்யக் கோருதல் - ஜம்மு பகுதிக்கும் சரிசமமாக நிவாரணம் வழங்கிட கோருதல் தொடர்பாக கோரிக்கை மனு

மாண்புமிகு பாரதப் பிரதமர் திருமிகு. நரேந்திரமோடி அவர்களுக்கு,

வணக்கம், வரலாறு காணாத வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலைத்தில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் வீடிழந்து வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர்.
போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவின் மாநில அரசாங்கம் செயல்படாத நிலையில் இருக்கிறது. முழுக்க முழுக்க நிவாரண நிதியை முறைகேடாகக் கையாள்கிறார். நிவாரணப்பணி நிதியில் பெருமளவு கையாடல் நடக்கிறது. 
உமர் அப்துல்லா அரசு பிரிவினைவாதிகளுக்கும் பயங்கர வாதிகளுக்கும் ஊக்கம் தரும் வகையில் செயல்பட்டுவருகிறது. உயிரைப் பணயம் வைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவரும் ராணுவத்தினருக்கு எதிராக நடைபெறும் கல்லெறிதல், தாக்குதல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாது வன்முறையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகிறார்.
இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் குறிப்பாக ஜம்மு பகுதிக்கு போதிய நிதியை ஒதுக்காமல் ஓரலஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறார். மேலும் மாநில அரசு உமர் அப்துல்லாவின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் வெளிப்படையாக அவரே தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு நிவாரணப்பணி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி நிதியை ஒதுக்குவது பாகிஸ்தானுக்கும், இந்திய இறையாண்மைக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
எனவே உமர் அப்துல்லா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும், நிவாரணப் பணிகளை ராணுவம் மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசே நேரடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
இந்துக்கள் வசிக்கும் ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களை இந்து மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..
என்றும் இறைபணியில்