பொறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்
முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை.
பொருள் : இந்து அருந்ததிய மக்களின் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோரிக்கை மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்து மக்கள் கட்சி கொங்கு நாடு அருந்ததியர் முன்னேற்றக் கழகம் அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட திருக்குலத்தோர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி அதிலும் குறிப்பாக அருந்ததிய மக்களின் கோரிக்கைகளை முன்னிருத்தி வருகின்ற 26.08.2014 (செவ்வாய்கிழமை) காலை 11.00 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த மக்கள் தொகையில் முப்பது சதவிகிதம் மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆவார்கள் (திருக்குலத்தோர்). அனால் 18 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாக உயர்த்தித்தரவேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இது சம்மந்தமாக மத்திய அரசின் கவனைத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேலும் துப்புரவு தொழிலாளர்களாகவும், பாத அணி தயாரிப்பாளர்களாகவும், பெரும்பாண்மையான அருந்ததிய மக்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்குரிய வாழ்வுரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
தலித் அமைப்புக்கள் என்கிற போர்வையில் கிருஸ்தவ தொண்டு நிறுவனங்களும், நாத்திக கம்யூனிஸ அமைப்புக்களும் அருந்ததிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து வருகின்றனர். கிருஸ்தவ அமைப்புக்களின் இத்தகைய நடவடிக்கைகள் தடை செய்யப்பட வேண்டும்.
நிகழ்ச்சியின்போது மத்திய மாநில அரசுகளுக்கு முன் வைக்கப்படும் 10 அம்ச கோரிக்கைகள் பின்வருமாறு.
1. இந்து தாழ்த்தப்பட்ட அரிஜன மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டுச் சலுகையை 18% லிருந்து 30% ஆக உயர்திட மத்திய அரசை வலியுறுத்தியும்
2. இந்து தாழ்த்தப்பட்ட அரிஜன மக்களின் இடஒதுக்கீட்டில் இந்து அருந்ததியர்களுக்கு 6% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தியும்
3. இந்து அரிஜன் இடஒதுக்கீட்டில் வழங்கப்படும் சலுகைகளை மதம் மாறியவர்களுக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தியும்,
4. இந்து அரிஜன இட ஒதுக்கீட்டில் பலன் பெற்றுவிட்டு மாற்று மதத்தினை பின்பற்றுபவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரியும்,
5. அரிஜன மக்களின் இடஒதுக்கீட்டு சலுகையை ஏற்கனவே அனுபவித்தவர்களின் வாரிசுகளுக்கு வழங்காமல் முதல் முறையாக பலன் பெருவோருக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும்
6. அரிஜன மக்களுக்கு பட்டா, வீடு, விவசாய நிலம் வழங்கிட மாநில அரசினை வலியுறுத்தியும்
7. கோவை நீதி மன்றத்திற்கு அருகிலே பாரதரத்னா அண்ணல் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் திரு உருவச்சிலையை நிறுவிடக் கோரியும்.
8. தமிழக அரசில் அருந்ததியர் நலத்துறை உருவாக்கப்பட்டு தனி அமைச்சர் மற்றும் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட கோரியும்.
9. இந்து திருக்கோயில்களில் அருந்ததிய மக்களுக்குரிய உரிமைகளும் மரியாதைகளும் காப்பாற்றப்பட வேண்டும், அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் கோயில்கள் கட்டிட நிதி உதவி செய்ய கோரியும்
10. இன்னும் கிராமப்புற பகுதிகளில் நிலவி வரும் இரட்டை குவளை உள்ளிட்ட நவீன தீண்டாமை இழிவுகளை ஒழித்துக்கட்ட வேண்டும்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு இ.ம.க நிறுவனத் தலைவர் தமிழ்த்திரு. அர்ஜுன் சம்பத் தலைமை தாங்குகிறார். கொங்கு நாடு அருந்ததிய முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.இளங்கோவன் அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் திரு.தேவராஜ் உள்ளிட்ட இந்து அருந்ததிய சமுதாயத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். ஒட்டு மொத்த இந்து சமுதாயமும் அருந்ததிய மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
என்றும் தேசப்பணியில்
நகல் : சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள்

No comments:
Post a Comment