
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு, தமைமைச் செயலகம், சென்னை
வழி : மின்னஞ்சல் வழியாக
பொருள் : பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை தமிழ் முறைப்படி அவரது சமாதி நட்சத்திர தினமான வரும் ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று (04/11/2014) இந்து கலாச்சாரப்படி பசும்பொன்னில் உள்ள அவரது சமாதி திருக்கோயிலில் அரசு விழாவாக நடத்திட வேண்டி மனு சமர்ப்பிக்கபடுகின்றது.
மாண்புமிகு தமிழக முதல்வர் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்!
தெய்வீகத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை ஆங்கிலக் காலண்டர் படி வருடம் தோறும் அவர் உயிர் நீத்த அக்டோபர் 30-ம் தேதி அரசு விழாவாக நடத்தி வருகின்றார்கள். இது தேவர் கொள்கைகளுக்கு ஏற்புடையதல்ல! நினைவு நாள் கொன்டாடடுவது ஆங்கிலேயர்களின் கலாச்சாரமாகும்.
ஆங்கிலேயர்களை இந்தியாவைவிட்டு வெளியேற்றவே தன் வாழ்நாள் முழுவதும் முத்துராமலிங்கத் தேவர் போராடினார். அவரது போராட்டம் ஆங்கிலேயர்களை வெளியேற்றுவது மட்டுமின்றி சுதந்திர இந்தியாவில் தேசியமும் தெய்வீகமும் வளரவேண்டும் என நாட்டிற்காகவும் ஆன்மீகத்திற்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்!
அவர் இந்து சமய மற்றும் இந்து கலாச்சார மரபுகளை போற்றியதும் தன் வாழ்வில் திருமண பந்தமின்றி பிரம்மச்சரிய விரதம் பூண்டு தலை சிறந்த தவநெறி வாழ்க்கையை மேற்கொண்டு சித்தர்களை வழிபட்டு சித்தர் நெறியை போற்றி அமரரானவர்.
அவரது நினைவை போற்றும் வண்ணம் தமிழக அரசு ஆண்டு தோறும் ஆங்கில தேதிபடி அக்டோபர் 30ம் தேதி அன்று குருபூஜை நடத்துவது இந்து கலாச்சார மரபுபடி ஏற்புடையதல்ல! இந்து சமய கலாச்சாரப்படி ஒருவர் உயர்நீத்த நாளுக்குரிய நட்சத்திரம், திதி ஆகியவைகளை அடிப்படையாக வைத்துதான் குருபூஜை நடக்கும்.
தேசிய வாதியாகவும், ஆன்மீக வாதியாகவும் விளங்கிய திரு.முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை இந்து கலாச்சாரப்படி அவர் உயிர்நீத்த ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாளன்று ஆண்டுதோறும் அரசு சார்பாக பசும்பொன் கிராமத்தில் அவரது சமாதிக் கோயிலில் குருபூஜை நடத்திட வேண்டும் என நூறு கோடி இந்துக்களின் சார்பாக பணிவுடன் வேண்டுகின்றோம்.
என்றும் இறைபணியில்
திரு.சோலைக்கண்ணன்
அன்புடன் ,
அர்ஜுன் சம்பத்
(இந்து மக்கள் கட்சி).
No comments:
Post a Comment