Thursday, 25 September 2014

ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஒரவஞ்சனையுடன் நடந்து கொள்ளும் ஒமர் அபுதுல்லா அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்யக் கோருதல் தொடர்பாக கோரிக்கை மனு

31/09/2014
புகார்மனு
பெறுநர்
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள்
கோட்டை, புதுதில்லி
வழி : அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள்
ஐயா,
பொருள் : ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஒரவஞ்சனையுடன் நடந்து கொள்ளும் ஒமர் அபுதுல்லா அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்யக் கோருதல் தொடர்பாக கோரிக்கை மனு
வரலாறு காணாத வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலைத்தில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் வீடிழந்து வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது.
போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா அரசாங்கம் செயல்படாத அரசாங்கமாக இருக்கிறது. முழுக்க முழுக்க நிவாரண நிதியை முறைகேடாகக் கையாள்கிறார்.
நிவாரணப்பணி நிதியில் பெருமளவு கையாடல் நடக்கிறது. உமர் அப்துல்லா அரசு பிரிவினைவாதிகளுக்கும் பயங்கர வாதிகளுக்கும் ஊக்கம் தரும் வகையில் செயல்பட்டுவருகிறது.
உயிரைப் பணயம் வைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவரும் ராணுவத்தினருக்கு எதிராக நடைபெறும் கல்லெறிதல், தாக்குதல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாது வன்முறையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகிறார்.
இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் குறிப்பாக ஜம்மு பகுதிக்கு போதிய நிதியை ஒதுக்காமல் ஓரலஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறார். மேலும் மாநில அரசு உமர் அப்துல்லாவின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் வெளிப்படையாக அவரே தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு நிவாரணப்பணி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி நிதியை ஒதுக்குவது பாகிஸ்தானுக்கும், இந்திய இறையாண்மைக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
எனவே உமர் அப்துல்லா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும், நிவாரணப் பணிகளை ராணுவம் மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசே நேரடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ல வேண்டும் எனவும்
இந்துக்கள் வசிக்கும் ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களை இந்து மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment