Tuesday, 23 September 2014

இந்து மக்கள் கட்சி சார்பில் மலைவாழ்மக்களுக்கு கோனியம்மன் கோயிலில் சிறப்பு மரியாதை - கூட்டு வழிபாடு மற்றும் கருத்தரங்கத் தீர்மானங்கள் கோரிக்கை

Photo

திரு.தேவகோவிந்தராஜன் 90430 58899                                  21.08.2014
மாநில துணைத்தலைவர்

கோரிக்கை மனு

பொறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்
முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை.

பொருள் : இந்து மக்கள் கட்சி சார்பில் மலைவாழ்மக்களுக்கு கோனியம்மன் கோயிலில் சிறப்பு மரியாதை - கூட்டு வழிபாடு மற்றும் கருத்தரங்கத் தீர்மானங்கள் கோரிக்கை மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.

கோவையின் ஆதிகுடிமக்களான இருளர்கள், காடர்கள், தொதுவர்கள் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் மற்றும் வனவாசி மக்களின் தலைவர்களில் ஒருவரான கோவன் என்பவர் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாக அமைத்த ஆலயம் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலாகும். கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலின் ராஜகோபுர கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததை தொடர்ந்து நடைபெற்று வரும் மண்டலபூஜைத் திருவிழாவின் 43-ம் நாள் பூஜையின் போது (23.08.2014 சனிக்கிழமை) காலை 11.00 மணியளவில் கோவையின் பூர்வ குடிமக்களான மலைவாழ்மக்கள் மற்றும் வனவாசி மக்களை கௌரவிக்க இந்து மக்கள் கட்சி சார்பில் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பல நூறு ஆண்டுகளாக வசிக்கும் இந்து மலைவாழ் மற்றும் வனவாசி மக்கள் சார்பில் பழங்குடி இன மக்களின் தலைவர்களான மூப்பர்கள் பலர் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளுடன் வழிபாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். ஆதிகுடிமக்களுக்கு இ.ம.க சார்பில் சிறப்பு மரியாதைகளும், கூட்டு வழிபாடும் செய்யப்படுகிறது.
மேற்படி சிறப்பு மிக்க விழா பேரூர் ஆதீனம் தவத்திரு. சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் ஆகியோரது நல்லாசிகளுடனும் பேரூர் ஆதீனம் இளையபட்டம் தவத்திரு. மருதாச்சல அடிகளார், காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேசுவர சுவாமிகள், பிள்ளையார் பீடம் தவத்திரு. பொன்மணி வாசக அடிகளார், வாரஹி பீடம் தவத்திரு.மணிகண்ட சுவாமிகள், லலிதாம்பிகை பீடம் தவத்திரு. ஜகனாத சுவாமிகள், குபேரீசுவரர் அறக்கட்டளை பிரசன்ன சுவாமிகள், கந்த லோகம் சிவசுப்பிரமணியம் அறக்கட்டளை தவத்திரு.பாஸ்கர சுவாமிகள், மலுமிச்சம்பட்டி நாகசக்தி பீடம் தவத்திரு.சிவசன்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் உள்ளிட்ட இந்து சமய குருமார்கள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக 23.08.2014 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மேற்கு தொடர்ச்சி மலைவாழ் மக்கள் மற்றும் வனவாசி மக்களின் கோரிக்கை கருத்தரங்கம் கோவை R.S.புரம், சுப்பிரமணியம் தெருவில் உள்ள இ.ம.க. தலைமை அலுவலகத்தில் தமிழ்த்திரு. அர்ஜுன்சம்பத் தலைமையில் நடைபெற உள்ளது. கருத்தரங்கில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் பின்வருமாறு.

* கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பாரம்பரியமாக வசிக்கும் வனவாசி மற்றும் மலைவாழ் மக்களான இருளர், காடர், துதுவர் உள்ளிட்ட பூர்வகுடி மக்களின் வாழ்வுரிமை மற்றும் பாரம்பரியம் கலாச்சாரம் வழிபாடு ஆகியவை போற்றி பாதுகாத்திட வேண்டும். 

* வனவாசி மக்களைடையே கிறிஸ்துவ தொண்டு நிற்வனங்கள் மோசடி மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை தடை செய்ய வேண்டும்.

* மலை வாழ் மக்களுக்குண்டான இட ஒதுக்கீட்டை மதம் மாறி சென்ற போலிகள் அபகரித்துக் கொள்கின்றனர். இத்தகைய மோசடி நடவடிக்கைகளிலிருந்து மலைவாழ் மக்களை பாதுகாக்க வேண்டும். 

* மலைவாழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை மேசடி ஆவனங்கள் மூலம் கைப்பற்றுவது தடைசெய்யப்படவேண்டும்.

* மலைவாழ் மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

* மலைவாழ் மக்களுக்கான கல்வி வேலை வாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

* தமிழகத்தில் மலைவாழ்மக்களுக்கான தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். 

* மேற்கு தொடர்ச்சி மலையில் மலைவாழ் மக்கள் வசிப்பிடங்களில் சூரிய விளக்கு சுகாதாரம், மருத்துவம், மின் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து தர்ம சேவா அறக்கட்டளை மற்றும் இ.ம.க. தொண்டர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள். அனைவரும் ஒத்துழைக்கும்படி வேண்டுகிறோம்.

என்றும் இறைபணியில்

நகல் : சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள்

No comments:

Post a Comment