
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு, தமைமைச் செயலகம், சென்னை
வழி : மின்னஞ்சல் வழியாக
பொருள் : பொது மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து - அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டி கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்படுகின்றது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு,
வணக்கம், மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பொது மக்களுக்கு அன்றாட அத்தியாவசிய அடிப்படைத் தேவையான பால் மற்றும் பால் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விநியோகிக்கும் ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக மக்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளின் உயிரோடு விளையாடியுள்ளனர். இது மன்னிக்க முடியாது மகா கொடூரம். பச்சைக் குழந்தைகள் அருந்தும் பாலில் கலப்படம் செய்த பாவிகளை தண்டிக்க வேண்டுகிறோம்.
* ஆவின் பாலில் 20%க்கும் மேல் தண்ணீர் கலந்து அந்தப் பாலை தனியார் பால் நிறுவனங்களுக்கு விற்றதன் மூலம் கோடிக் கணக்கான ரூபாய்கள் மோசடி.
* பால் பதப்படுத்தலுக்கு உணவு கலப்படச் சட்டத்தையும் மீறி பார்மாலின் போன்ற பொருட்களை பயன்படுத்தி ஆவின் பாலின் தரத்தை விஷமாக்கி பாமர மக்களின் உடல் நலனுக்கு கேடு விளைவித்தது.
* ஆவின் பாலகங்கள் வழங்கியதில் கோடிக்கணக்கில் மோசடி செய்தது.
* ஆவின் பால் போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் மோசடி, முறைகேடு செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது.
* முறைகேடுகளில் ஈடுபட்ட சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வைத்தியலிங்கத்தோடு கூட்டணி அமைத்து செயல்பட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இது விஷயத்தில் நேரடியாக தலையிட்டு மோசடி நபர்களிளை குண்டர்கள் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து தேசிய உடைமையாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் இறைபணியில்
திரு.தேவகோவிந்தராஜ்
No comments:
Post a Comment