Thursday, 25 September 2014

மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோரிக்கை மனு - Indhu People Party Demands to Withdraw the proposed rise in Electrical Charges

https://www.facebook.com/photo.php?fbid=716536455095385&set=a.184206001661769.47522.100002171102976&type=1
திரு.தேவகோவிந்தராஜ் 
Cell : 90430 58899
மாநில துணைத் தலைவர்
கோரிக்கை மனு
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு, தமைமைச் செயலகம், சென்னை
வழி : மின்னஞ்சல் வழியாக
பொருள் : மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்படுகின்றது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு,
வணக்கம், தமிழகம் ஏற்கனவே மின் பற்றாக்குறையாலும், மின்தடையாலும் மிக கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற மாநிலம் ஆகும். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்குப்பின் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் திராவிட இயக்கங்களின் ஆட்சிக்காலத்தில் துவக்கப்படவில்லை. இதுவிஷயத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இருகட்சிகளும் பெரிதாக அக்கறை எதுவும் எடுக்கவில்லை. மின்வாரியம் நிர்வாக சீர்கேடுகளாலும், மின் திருட்டு உள்ளிட்ட காரணங்களாலும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கி மின்பற்றாக்குறையை அவ்வப்போது சமாளித்துவந்தனர். புதிய மின் உற்பத்தி திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் முழுமின்சாரமும் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை. இயங்கிவரும் மின் உற்பத்தி நிலையங்களும் திடீர் திடீர் என பழுதாகிவிடுகின்றன.
மின்வெட்டின் காரணமாக தமிழக முழுவதும் தொழிற்சாலைகளும் விவசாயமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இயந்திரப் பணிமனைகளுக்கான மின்கட்டண உயர்வு 15% க்கும் மேல் உயர்த்தப்பட்ட உள்ளதாக மின்வாரிய மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
எனவே மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற்று தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டுமென்று தமிழக முதல்வரை இந்து மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய கருத்துக்கேட்புக் கூட்டத்தில் இந்த கட்டண உயர்வை இ.ம.க. கடுமையாக எதிர்க்கும். இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெறாவிடில் தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
என்றும் இறைபணியில்

No comments:

Post a Comment