Thursday, 25 September 2014

Ban Meat Shops and Liqours shops on Ramalinga adigalar Vallalar Birthday - IMK Demands



பொருள் : வள்ளலார் பிறந்த நாளன்று மதுமாமிசக் கடைகளை மூடி உத்தரவு பிறப்பிக்க வேண்டி மனு சமர்ப்பிக்கபடுகின்றது.

தேதி : 26.09.2014

T.C.செந்தில்குமார்
Cell : 9362955888
மாநில செயலாளர்

கோரிக்கைமனு

பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு, தமைமைச் செயலகம், சென்னை

வழி : மின்னஞ்சல் வழியாக

பொருள் : வள்ளலார் பிறந்த நாளன்று மதுமாமிசக் கடைகளை மூடி உத்தரவு பிறப்பிக்க வேண்டி மனு சமர்ப்பிக்கபடுகின்றது.

மாண்புமிகு தமிழக முதல்வர் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்!
வரும் 05.10.2014-ம் தேதி தமிழகத்தின் தவப்புதல்வன், சன்மார்க்க சங்க நிறுவனர், காருண்யா மூர்த்தி - வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடி நின்ற வள்ளலாரின் அவதார நாளாகும். இராமலிங்க அடிகளார் எனும் இயற்பெயர் கொன்ட வள்ளலார் கொல்லாமை நெறியை உலகிற்கு போதித்த உத்தமர் ஆவார் தமிழகம் மட்டுமல்லாமல் மனித குலம் முழுமைக்குமான சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர். மக்களின் பசிப்பினி போக்க வடலூரில் சத்திய ஞான தரும சாலையை நிறுவியவர். தமிழக அரசும் வள்ளலார் கொள்கைகளை போற்றும் வகையில் வருடந்தோறும் அவரது அவதார நாளில் மது மாமிச கடைகளை மூடி மரியாதை செலுத்தி வருகின்றது.
இந்த ஆண்டு யதேச்சையாக முஸ்லீம்கள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகை நாளும், வள்ளலார் பிறந்த நாளும் ஒரே தினத்தில் வருகின்றது. மேற்படி நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டும் உள்ளது. இசுலாமியர்களின் பக்ரீத் பண்டிகை தினத்தன்று ஆடு மற்றும் ஒட்டகங்களை பலியிட்டு (குர்பானி கொடுத்து) அதன் மாமிசங்களை உண்பார்கள் இது அவர்களின் வழக்கம் சகிப்புத்தன்மை கொண்ட தமிழக மக்களுக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் வள்ளலார் அவாதார தினத்தில் வழக்கம்போல மதுமாமிச விற்பனையை தமிழக அரசு தடை செய்து மது மாமிசக் கடைகளை மூட வேண்டும். அரசு வதைக்கூடங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள், மாமிசக்கடைகள் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும். ஒட்டகம் ஆடுகள் ஆகிய்வற்றை பலியிடுவதையும் தடை செய்ய வேண்டும். தமிழக அரசின் சார்பில் வழக்கம் போல வள்ளலார் பிறந்த நாளன்று மதுமாமிசக் கடைகளை மூடி உத்தரவு பிறப்பித்து வள்ளலாருக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
மஹாவீரர், புத்தர் ஆகியோரது பிறந்த நாளன்றும் மது மாமிசக்கடைகள் மூடப்படுகின்றது என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.
பக்ரீத் என்பது பிறைபார்த்து கொண்டாடப்படும் நாளாகும். இசுலாமிய மதத்தலைவர்கள் பக்ரீத் நாளை நிர்ணயிப்பார்கள். இது மாறுதலுக்குட்பட்டது. ஆனால் வள்ளலார் அவதார நாள் அக்டோபர் 5 என்பது மாறுதலுக்குட்பட்டது அல்ல. இசுலாமியர்களில் சிலரும் வள்ளலார் கொள்கையை ஆதரிப்பவர்கள்.
மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பெரும்பான்மை ஆள வேண்டும் சிறுபான்மை வாழ வேண்டும் என்கிற கோட்டின்படி செயல்படுபவர் ஆவார்கள். எனவே வள்ளலாருக்கு வருடந்தோறும் செய்யும் மரியாதையை செய்திட வேண்டுகிறோம்.
என்றும் இறைபணியில்

No comments:

Post a Comment