Friday, 10 October 2014

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் இராணுவத்துக்கு பாடம் புகட்ட பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டி போர் முரசு கொட்டும் நிகழ்ச்சி.

திரு.மலைக்கோட்டை வெ.தர்மா
Cell : 9443649410
திண்டுக்கல் மாவட்டத் தலைவர்

கோரிக்கைமனு

10.10.2014

பெறுநர்
மாண்புமிகு பாரதப் பிரதமர் திருமிகு. நரேந்திரமோடி அவர்கள்
சவுத் பிளாக், செக்ரடேரியட் பில்டிங், ரெய்சினா ஹில், புதுதில்லி.
வழி :  தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள  அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் வழியாக

பொருள் : இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் இராணுவத்துக்கு பாடம் புகட்ட பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டி போர் முரசு கொட்டும் நிகழ்ச்சி.

மாண்புமிகு பாரத பிரதமர் திருமிகு. நரேந்திரமோடி அவர்களுக்கு வணக்கம்!

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் இரானுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து இராணுவ நிலைகள் மீதும் குடியிருப்பு பகுதிகள் மீதும் தொடர் தாக்குதல்கள் நடத்தி இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்திய இராணுவம் எல்லையை காக்கும் பொருட்டு தற்காப்பு யுத்தத்திலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் அட்டூழியம் புரிந்து வருகிறது. மேலும் காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்ரமித்து வைத்துள்ளது. பயங்கர வாதத்தின் பிறப்பிடமாகவும் புகலிடமாகவும் உள்ள பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் இந்தியாவில் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நிகழ்த்தி அப்பாவி பொதுமக்களை கொண்று குவித்து வருகின்றது.

உலக அளவில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ஆகிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்கவும், நமது எல்லைகளை காக்கவும், எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கவும் இந்திய அரசு பாகிஸ்தான மீது போர் பிரகடனம் செய்து பாகிஸ்தானை முழுமையாக கைப்பற்ற இந்திய இரானுவத்திற்கு உத்திரவிட வேண்டும் என்பதை இ.ம.க சார்பில் கேட்டுக்கொள்ப்படுகிறது.

இது விஷயத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் நேரடியாக கவனம் கொடுத்து எமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகிறோம்.
என்றும் இறைபணியில்

 
அன்புடன் ,
அர்ஜுன் சம்பத்
(இந்து மக்கள் கட்சி).

No comments:

Post a Comment