Friday, 3 October 2014

இந்து மத நம்பிக்கைகள் மற்றும் குலசேகர பட்டிணம் தசரா விழா தொடர்பாக அவதூறான கருத்துக்களை வெளியிட்டு இந்து மத உணர்வுகளை புண்படுத்திய கிறித்துவ மத போதகர் மோகன் சி. லாசரஸ் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.


அர்ஜுன்சம்பத் இந்துமக்கள்கட்சி- தமிழகம்'s photo.

பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்
(வழி) மாவட்ட ஆட்சியாளர் அவர்கள்
__________________ மாவட்டம்

புகார்மனு

பொருள் : இந்து மத நம்பிக்கைகள் மற்றும் குலசேகர பட்டிணம் தசரா விழா தொடர்பாக அவதூறான கருத்துக்களை வெளியிட்டு இந்து மத உணர்வுகளை புண்படுத்திய கிறித்துவ மத போதகர் மோகன் சி. லாசரஸ் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,
வணக்கம், தமிழகத்தில் வரும் 24/09/2014 முதல் அக்டோபர் 03/10/2014 வரை தசரா திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள இலட்சக்கணக்கான தமிழர்கள் குலசேகர பட்டிணம் ஸ்ரீ முத்தூராம்மன் திருக்கோயிலில் கூடி தசரா திருவிழாவை சிறப்பாக விரதமிருந்து பன்னெடுங்காலமாக கொண்டாடி வருகின்றனர். 
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி கிராமத்தை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மோகன் சி.லாசரஸ் என்கிற கிறிஸ்தவ மதபோதகர் அவரது பின்மாரிமலர் என்னும் பத்திரிக்கையில் தசராவிழா குறித்தும், தசரா விழாவில் விரதமிருந்து வேடமணிந்து காணிக்கை செலுத்த வரும் தமிழர்கள் குறித்தும் அவதூறு கற்பிக்கும் வகையிலும் இந்து மத, சமய ஆன்மீக உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையிலும் எழுதி உள்ளார்.

இந்து மத உனர்வுகளை புண்படுத்தும் உள் நோக்கத்துடனும் தமிழகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற திட்டத்துடனும் மோகன் சிலாசரஸ் செயல்பட்டு வருகிறார்.

மேலும் கடந்த சில வருடங்களாகவே மோகன் சி.லாசரஸின் கிறிஸ்த்துவ மத, பிரச்சாரக் கூட்டங்களில், தமிழர் தெய்வங்களை "சாத்தான்கள்" என்றும் "பிசாசுகள்" என்றும் பகிரங்கமாக பேசியும் எழுதியும் வருகிறார். நாலுமாவடியில் அவர் நடத்துகிற  ஜெபக்கூட்டங்களின் போதும் தமிழகம் முழுக்க மோகன் சி.லாசரஸ் நடத்துகிற கிறிஸ்தவ மதபிரச்சாரங்களின் போதும், இந்துக் கடவுள்களை அவமதித்து பேசி வருகிறார். மேலும், அவர் பிரச்சாரம் செய்கின்ற ஆசிர்வாதம், மாதா, ஜீஸஸ், God, தமிழன், இமயம் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளில் இந்து சமயம் குறித்தும், தமிழர்களின் வழிபாடு குறித்தும், இந்துக் கடவுள்கள் குறித்தும் அவதூறு கற்பிக்கும் வகையிலும் தமிழக மக்களிடையே நிலவிவரும் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் செயல்பட்டுவருகிறார்.

தனக்கு பக்க பலமாக அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா-சின்னத்திரை நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களை வைத்தும் இத்தகைய காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். பல நோயாளிகளை குணப்படுத்துவதாக கூறி மோசடி செய்கிறார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கிறிஸ்தவ மத போதனைகளுக்காக நன்கொடைகள் பெற்று நிதி மோசடியிலும் ஈடுபட்டுவருகிறார். பல குடும்பங்கள் இவரை நம்பி ஏமாந்து வருகின்றனர். எனவே 
1. தமிழகத்தில் இவர் நடத்தும் மத பிரச்சாரக் கூட்டங்களை தடை செய்ய வேண்டும்.
2. மோகன் சி.லாசரஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் 
3. நிதிமோசடிகள் குறித்து விசாரித்து சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்.
4. இந்திய இறையாண்மைக்கு எதிராக இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசி முத்தாரம்மன் வழிபாட்டை கேவலப்படுத்திய மோகன் சி.லாசரஸை தேசிய பாதுகாப்பு தடைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


என்றும் இறைபணியில்

தமிழ்திரு. அர்ஜுன் சம்பத்
நிறுவனர் - தலைவர்

இணைப்பு : பத்திரிக்கையில் வெளியான - செய்தி நகல்
 
அன்புடன் ,
அர்ஜுன் சம்பத்
(இந்து மக்கள் கட்சி).


No comments:

Post a Comment