பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜ் விவகாரத்தில் ஈழ இந்துத் தமிழர்களை தொடர்பு படுத்துவதற்கு கடும் கண்டனம்.
தேதி : 26.09.2014
புகார்மனு மற்றும் செய்திக்குறிப்பு
பெறுநர்
மாண்புமிகு பாரதப் பிரதமர் திருமிகு. நரேந்திரமோடி அவர்கள்
சவுத் பிளாக், செக்ரடேரியட் பில்டிங், ரெய்சினா ஹில், புதுதில்லி.
பொருள் : பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜ் விவகாரத்தில் ஈழ இந்துத் தமிழர்களை தொடர்பு படுத்துவதற்கு கடும் கண்டனம்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திருமிகு. நரேந்திரமோடி அவர்களுக்கு,
வணக்கம், இலங்கையின் பூர்வ குடிகளாகிய இந்துத் தமிழர்கள் சிங்கள பௌத்த பேரினவாத ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஒரு நூற்றாண்டு காலமாக போராடி வருகின்றனர்.
இந்திய இந்துத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் சுதந்திரத்திற்கு பிறகு பௌத்தப் பேரினவாத அரசாங்கத்தின் கீழ் சம உரிமையின்றி அடிமைபடுத்தப்பட்டு கிடக்கின்றனர். இனவெறிக் கொள்கைகளை கடைபிடிக்கும் கொழுப்பு சிங்கள அரசாங்கம் இலங்கை இந்து தமிழினத்தை பூண்டோடு அழிக்க திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது.
இலங்கை தமிழர்கள் என்றும் எப்போதும் இந்தியத் திருநாட்டை தங்கள் தாய்நாடாக கருதி செயல்பட்டு வருபவர்கள். ஆனால் சிங்களவர்கள் இந்திய நாட்டை எதிரி நாடாகக் கருதியே செயல்பட்டு வருகிரார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 'எதிரிக்கு எதிரி நண்பன்' எனும் அடிப்படையில் இந்தியாவின் எதிரி நாடுகளோடு நேசக்கரம் பூண்டவர்கள் சிங்களவர்கள்.
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா சந்தித்த (பாகிஸ்தான் - சீனா - வங்க தேச யுத்த காலகட்டங்களில் ஈழ இந்துத் தமிழர்கள் இந்திய திருநாட்டை ஆதரித்தனர் என்பதும், சிங்களவர்கள் இந்தியாவை எதிர்த்து பாகிஸ்தான் - சீன நாடுகளோடு நட்பு கொண்டதும் வரலாறாகும்.
ஈழத் தமிழர்கள் நடத்திய அமைதி வழி விடுதலைப் போராட்டங்களின் போதும் சரி ஆயுத வழி விடுதலைப் போராட்டங்களின் போதும் சரி இந்திய நாட்டின் நலன் சார்ந்தே தங்களது சுதந்திரப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளோ அமைதி வழிப்போராளிகளோ ஒருபோதும் பாகிஸ்தானுக்கோ, சீனாவுக்கோ துணை போனதில்லை.
மேலும் விடுதலைப் புலிகளின் சுதந்திர தமிழீழ அரசு இலங்கையில் செயல்பட்ட காலகட்டங்களில் தமிழீழத்திற்கு எதிரான முஸ்லீம்களை தமிழீழத்திலிருந்து முழுமையாக வெளியேற வேண்டுமென உத்தரவு பிறப்பித்தவர் புலிகளின் தலைவர் பிரபாகரன். ஆனால் ISI உளவு அமைப்பும், சீன உளவுத்துறையும் கொழும்பில் முகாம் அமைத்து முழுமையாக செயல்பட உத்தரவிட்டு உதவி வருபவர் சிங்கள அதிபர் இராஜபக்சே.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி கொழும்பில் பாகிஸ்தான் ISI உளவாளிகளால் பயிற்றுவிக்கப்பட்ட்வர் என்பது புலனாய்வில் தெளிவாகின்றது. மேலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் ISI உளவு ஸ்தாபனத்திற்கு இலங்கை அரசு மறைமுகமாக உதவி வருகிறது என்பது ஊரறிந்த உண்மை.
இராஜபக்சே கட்சியும், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைந்து போட்டியிட்டு இராஜபக்சே அரசு பெரும்பான்மை பெற்றதும் ஈழத் தமிழர்களின் தொன்மை தாயகமான கிழக்கு மாகாணத்தில் இராஜபக்சே உதவியுடன், முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருப்பதும் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்றுள்ள அரசியல் நிகழ்வுகளாகும்.
இந்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது பழிசுமத்தும் முறையிலும் இந்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் ISI உளவாளி அருண் செல்வராஜை விடுதலைப் புலிகள் இயக்கத்தோடும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடும் தொடர்பு படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்தியாவில் உள்ள இராஜபக்சே ஆதரவாளர்கள் சிலர் இத்தகைய விஷமப் பிரச்சாரத்தை செய்து வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அருண் செல்வராஜுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை இந்து மக்கள் கட்சி தெளிபடுத்த விரும்புகிறது. இலங்கை பிரச்சினைக்கும், தமிழக மீனவர் பிரச்சனைக்கும் தனித் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்பதை இந்து மக்கள் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.
பாகிஸ்தானால் பாதிக்கப்பட்ட வங்கதேச முஸ்லீம்களுக்காக திருமதி.இந்திரா காந்தியால் பங்களாதேஷ் உருவாக்கப்பட்டதுபோல நரேந்திரமோடி அவர்கள் இலங்கை இந்துத் தமிழர்களுக்காக தனித் தமிழ் ஈழம் அமைத்துத் தர வேண்டும் என இந்து மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
என்றும் இறைபணியில்
அன்புடன் ,
அர்ஜுன் சம்பத்
(இந்து மக்கள் கட்சி).

No comments:
Post a Comment