Friday, 10 October 2014

ஸ்ரீரங்கம் - கொள்ளிடக்கரை இராமானுஜர் புனித நீராடிய தவராசன் படித்துறை அறிவிப்பு பலகையை சேதப்படுத்தி இராமானுஜர் சிலையைத் திருடிச் சென்ற (எதிரி) சிவக்குமார் மற்றும் அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல். இராமானுஜர் தவராசன் படித்துறையில் தமிழக அரசு சார்பில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டுதல்.

அர்ஜுன்சம்பத் இந்துமக்கள்கட்சி- தமிழகம்'s photo.
சிவத்திரு.பால்ராஜ்சாமி   
Cell : 9345104325
திருச்சி மாவட்டத் தலைவர்

கோரிக்கைமனு

10.10.2014

பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை
வழி : மின்னஞ்சல் வழியாக

பொருள் : ஸ்ரீரங்கம் - கொள்ளிடக்கரை இராமானுஜர் புனித நீராடிய தவராசன் படித்துறை அறிவிப்பு பலகையை சேதப்படுத்தி இராமானுஜர் சிலையைத் திருடிச் சென்ற (எதிரி) சிவக்குமார் மற்றும் அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல். இராமானுஜர் தவராசன் படித்துறையில் தமிழக அரசு சார்பில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டுதல்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!

ஸ்ரீரங்கம் - கொள்ளிடக்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீஇராமானுஜர் அன்றாடம் நீராடிய தவராசன் படித்துறை உள்ளது. காலப்போக்கில் பழுதடைந்த இப்படித்துறை மக்கள் பயன்பாட்டிற்காக திவ்யதேச பாரம்பரிய பாதுகாப்பு பேரவையின் முயற்சி காரணமாக சீரமைக்கப்பட்டு அறிவிப்பு பலகையும் இராமானுஜர் சிலையும் நிறுவப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. 

15.09.2014-ம் தேதி எதிரி சிவக்குமார் என்பவர் அடியாட்களுடன் வந்து அறிவிப்பு பலகையை உடைத்து இராமானுஜர் சிலையையும் திருடிச் சென்று விட்டனர். இது சம்பந்தமாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு (CSR.317/2014) ஏற்பு கடிதம் பெற்றுள்ளனர். காவல்துறை இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. எதிரி சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இராமானுஜர் சிலை மற்றும் அறிவிப்புப் பலகை மீட்கப்படவில்லை.

தமிழக அரசு இது விஷயத்தில் நேரடியாக தலையிட்டு ஸ்ரீரங்கம் - கொள்ளிடக்கரை தவராசன் படித்துறையை சீரமைத்து இராமானுஜர் வரலாற்றை அறிவிப்பு பலகையில் எழுதிவைத்து இராமானுஜர் சிலையை நிறுவி தினசரி வழிபாடுகள் நடைபெறவும், மக்கள் பயன் பெறவும், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

ஸ்ரீ இராமானுஜர் ஆயிரமாவது பிறந்த நாளுக்குள் இப்படித்துறையை நினைவுச்சின்னமாக அறிவித்து பராமரிக்க வேண்டும். இது விஷயத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் நேரடியாக கவனம் கொடுத்து எமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகிறோம்.
என்றும் இறைபணியில்

 
அன்புடன் ,
அர்ஜுன் சம்பத்
(இந்து மக்கள் கட்சி).

No comments:

Post a Comment