
திரு. முனீஸ்வரன்
Cell : 81100 19666
மதுரை புறநகர் மாவட்ட அமைப்பாளர்
10.10.2014
கோரிக்கைமனு
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை
வழி : மின்னஞ்சல் வழியாக
பொருள் : திருவாதவூர் - மாணிக்கவாசகர் பிறந்த மண்ணில் அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்த்துவ சர்ச்சை உடனடியாக அகற்றிட வேண்டுதல்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் உள்ளது. இக்கிராமத்தில் ஒரு கிறிஸ்த்துவ குடும்பம் கூட கிடையாது. ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கிறிஸ்துவசர்ச் ஒன்றை மாணிக்கவாசகர் கோயில் அருகிலேயே அமைத்துள்ளனர்.
மேலும் இக்கிராமத்தில் வசித்து வரும் அப்பாவி பொது மக்களை பிரார்த்தனை கூட்டங்களுக்கு அழைத்து கிறிஸ்துவ மதப்பிரச்சாரம் செய்துள்ளனர். இலவச சாப்பாடு வழங்குதல் கிறிஸ்துவ ஜெபக்கூட்டம் நடத்துதல் உள்ளிட்ட மோசடி மதமாற்ற முயற்சிகள் அனைத்தையும் செய்து வந்துள்ளனர். இதன் காரணமாக ஊர்ப்பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்து இயக்கங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
திரு.சின்மயாசோமசுந்தரம் தலைமையில் இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கிறிஸ்துவ மதப்பிரச்சார கூட்டங்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சர்ச் அப்படியே உள்ளது. இதன் காரணமாக கிறிஸ்துவர்கள் தொடர்ந்து மோசடி மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.
திருவாதவூரில் சர்ச்கட்ட (கிறிஸ்துவ வழிபாட்டுக்கூடம்) அரசு அனுமதி ஏதும் பெறவில்லை. எனவே திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்த மண்ணில் சட்டவிரோதமாக அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கிறிஸ்துவ சர்ச்சை உடனடியாக அகற்றிட வேண்டும் என இ.ம.க. சார்பில் கோருகின்றோம்.
இது விஷயத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் நேரடியாக கவனம் கொடுத்து எமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகிறோம்.
என்றும் இறைபணியில்
அன்புடன் ,
அர்ஜுன் சம்பத்
(இந்து மக்கள் கட்சி).
No comments:
Post a Comment